டேனி பாயில் படத்தில் ஆமீர் கான்?

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருது பெற்ற பாயில் அடுத்த படத்திற்குத் தயாராகியுள்ளார். அதற்கான நடிகரைத் தேடிக் கொண்டிருக்கிறார்.
ஸ்லம்டாக் மில்லியனர் பட பிரீமியரின்போதே ஆமிர்கானை அவர் சந்தித்திருந்தார். அப்போது உங்களுடன் சேர்ந்து செயல்பட விரும்புகிறேன் என்று ஆமிரிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மும்பை வந்த அவர் ஆமிர்கானை சந்தித்துப் பேசினார். அப்போது தனது புதிய படம் குறித்து ஆமிர் கானுடன் விவாதித்தார்.
இந்த சந்திப்பு குறித்து பாயில் கூறுகையில், ஆமிர்கானுடன் நடந்த விவாதம் சிறப்பாக இருந்தது. என்னிடம் அருமையான ஸ்கிரிப்ட் உள்ளது. அதற்கு ஆமிர்கான் பொருத்தமாக இருப்பார் என்று நான் இதுவரை முடிவு செய்யவில்லை. ஆனால் அவர் முழுமையாக இருப்பார் என கருதுகிறேன்.
ஆமி்ர்கான் இயக்கிய தாரே ஜமீன் பர் படம் பார்த்தேன். சிறப்பான இயக்குநராக அதில் அவர் வெளிப்பட்டுள்ளார் என்றார் பாயில்.


Click it and Unblock the Notifications











