கலைப்புலி தாணு தயாரிப்பில் ஆர்யா

படம் ரிலீசான கையோடு தனது அடுத்த படத்தைத் துவக்குகிறார் கலைப்புலி. இந்தப் படத்துக்கும் இயக்குநர் அதே சுசி கணேசன்தான். கிட்டத்தட்ட கந்தசாமி டீமை அப்படியே அழைத்து வருகிறார் இந்தப் படத்துக்கும் சுசி. நாயகன் - நாயகி மட்டும்தான் வேறு.
இந்தப் புதிய படத்தில் நாயகனாக ஆர்யா நடிக்கிறார். கந்தசாமி போல பெரும் பட்ஜெட்டில், நீண்ட நாள் இழுத்துக் கொண்டிருக்காமல், எட்டே மாதங்களில் படத்தை முடித்து விடுவதாக சுசி கணேசன் தாணுவுக்கு நம்பிக்கை தந்துள்ளாராம்.
ஆர்யாவுக்கு மதராஸ்பட்டணம், சிக்கு புக்கு, நீரவ் ஷா படம் என வரிசையாக கமிட்மெண்ட் இருந்தாலும், தாணுவுக்காக பல தேதிகளை அட்ஜஸ்ட் செய்து கால்ஷீட் தந்துள்ளாராம்.
இந்தப் படம் தவிர வேறொரு மெகா பட்ஜெட் படத்துக்கும் தாணு திட்டமிட்டுள்ளாராம். இதில் இன்றைய டாப் ஹீரோக்களில் ஒருவர் நடிப்பதாக உள்ளாராம். விரைவில் முறையான அறிவிப்பை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார் தாணு.


Click it and Unblock the Notifications











