Don't Miss!
- Automobiles இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!
- Lifestyle Today Rasi Palan 23 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப் பெரிய நிதி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது...
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சிந்து சமவெளி... ஏ சான்றும், ஏக பாராட்டும்!
தமிழ் பட உலகில், சர்ச்சைக்குரிய கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குபவர் என்ற பெயரை குறுகிய காலத்தில் சம்பாதித்து விட்டவர் சாமி. பாலீஷ் வார்த்தைகளால் பேசத் தெரியாத படைப்பாளியான இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கினாலும், சரக்கிருப்பதால் இன்னமும் கோடம்பாக்கத்தில் மதிக்கப்படுகிறார்.
இவர் இயக்கிய முதல் படம், 'உயிர்.' கொழுந்தன் மீது ஆசைப்படும் (கணவன் கையாலாகாதவன் என்பதால்) அண்ணியை பற்றிய கதை. அடுத்து இவர் இயக்கிய 'மிருகம்', ஊருக்கு அடங்காத ஒருவன், உயிர் கொல்லி நோய் வந்து சாகிற கதை. இந்தப் படம் வன்முறையை சற்று அதிகமாக தூக்கிப் பிடிப்பது போலத் தெரிந்தாலும், எய்ட்ஸை மையப்படுத்தி வந்த ஒரே படம் என்ற பெருமையைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து சாமி இயக்கியுள்ள புதிய படம் சிந்து சமவெளி.
இது, கள்ள உறவால் ஏற்படும் விபரீத விளைவுகளை சித்தரிக்கும் படம். ஹரீஷ் கல்யாண் கதாநாயகனாகவும், அனகா கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள்.
இந்த படம், தணிக்கைக்காக அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர், 3 காட்சிகளை மட்டும் நீக்கிவிட்டு, படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கினார்கள்.
அதே நேரம், தினசரி செய்தித்தாள்களைத் திறந்தால் வரும் கள்ளக் காதல் செய்திகல் இந்தப் படத்தால் கொஞ்சமாவது குறையும் என்று நம்புவதாக பாராட்டும் தெரிவித்துள்ளனர்.