ஷாருக், சல்மான் இடையே சமரசம் ஏற்படுத்த ஃபாரா கான் தயார்
எதிரெதிர் முனையில் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக் கானுக்கும், சல்மான் கானுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைக்க தான் தயாராக இருப்பதாக பிரபல பெண் டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான ஃபாரா கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஷாருக், சல்மான் இருவர் இடையிலான மோதல் உலகறிந்தது. ஷாருக் கானை அவ்வப்போது வாரும் வகையி்ல் ஏதாவது பேசிக் கொண்டிருப்பார் சல்மான். இருவருக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைக்க பலரும் முயன்றும் தோல்வியிலேயே அது முடிந்துள்ளது.
இந்த நிலையில், ஷாருக், சல்மான் ஆகியோருக்கு நெருங்கிய தோழியான ஃபாரா இரு கான்களுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வைக்க தான் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஷாருக், சல்மான் இடையிலான மோதல் நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. இருவரையும் நான் விரும்புகிறேன். இருவருக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க நான் விரும்புகிறேன்.
இந்த மோதல் முடிவுக்கு வர வேண்டும். இருவரையும் உட்கார வைத்துப் பேசினால் எல்லாம் சரியாகி விடும் என்று கூறியுள்ளார் ஃபாரா.
தேரே மேரே பீச் மெய்ன் என்ற சாட் நிகழ்ச்சியில் தற்போது ஹோஸ்ட் ஆக இருக்கிறார் ஃபாராகான். இந்த நிகழ்ச்சியின் முதல் விருந்தினர்களாக சல்மானும், அவரது தாயாரும் கலந்து கொண்டனர். கடைசி பகுதியில் ஷாருக் கானை வரவழைக்க திட்டமிட்டுள்ளார் ஃபாரா.
ஃபாரா முயற்சியாவது பலிக்கட்டும், சல்மான் - ஷாருக் சண்டை ஓயட்டும்.


Click it and Unblock the Notifications











