கோவா பட விழாவில் 4 தமிழ் படங்கள்!

By Staff

Kalloori movie still
கோவா சர்வதேச திரைப்பட விழாவுக்கு 4 தமிழ் படங்கள் தேர்வாகியுள்ளன. ஆனால் இந்தத் தேர்வு பலத்த சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

இந்த ஆண்டு சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் வரும் டிசம்பர் மாதம் நடக்கிறது. இந்தியாவில் தயாரான படங்களிலிருந்து மொத்தம் 25 படங்கள் இந்த விழாவுக்கு தேர்வகியுள்ளன.

அவற்றில் நான்கு தமிழ் திரைப்படங்கள். பில்லா, கல்லூரி, முதல் முதல் முதல் வரை மற்றும் கஞ்சீவரம் ஆகியவைதான் அந்த 4 படங்களும். இவற்றில் பில்லா, முதல் முதல் முதல் வரை படங்கள் வர்த்தகப் பிரிவில் தேர்வாகியுள்ளன.

தேர்வுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த பாராட்டுக்களுடன் விழாவில் இடம் பெற்றுள்ள படம் கல்லூரி. கிராமம் சார்ந்த கல்லூரி வாழ்க்கையின் அற்புதமான பதிவு என அனைவராலும் பாராட்டப்பட்ட படம் இது.

அஜீத் நடித்த பில்லாவுக்கு இது முதல் திரைப்பட விழா அல்ல. ஏற்கெனவே கேன்ஸ் பட விழாவில் கமர்ஷியல் பிரிவில் ஸ்க்ரீனிங்குக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்ட படம் இது. பக்கா கமர்ஷியல் மாஸ் மசாலா என்பதால் அந்த பிரிவுக்கு முழுத் தகுதி பெற்ற படமாக பில்லாவை அங்கீகரித்துள்ளனர்.

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள கஞ்சீவரம் ஏற்கெனவே டொரண்டோ விழாவில் பங்கேற்று பாராட்டுக்களைப் பெற்ற படம். காஞ்சிபுரம் நெசவாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி, விருதுக்காக மட்டுமே இயக்குநர் ப்ரியதர்ஷன் எடுத்த படம் இது.

நகரவாசிகளுக்காகவே எடுக்கப்பட்டது என்ற அறிவிப்புடன் வெளிவந்த படம் 'முதல் முதல் முதல் வரை'. இந்தப் படம் கமர்ஷியல் பிரிவில் இடம் பெற்றதுதான் பலரையும் வியப்புக்குள்ளாக்கியுள்ளது.

"காரணம் இந்தப் படம் வணிக ரீதியில் படு தோல்வியடைந்தது. தனி மனித வக்கிரத்தனத்தை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்டது. வணிக ரீதியான சமாச்சாரங்களும் இந்தப் படத்தில் கிடையாது. இதை எந்த அடிப்படையில் சிறந்த வணிகப் படமாக தேர்வு செய்தனர் என்பது வியப்பாக உள்ளது... எல்லாம் தேர்வுக் குழுவுக்கே வெளிச்சம்..." என்கிறார்கள் நல்ல படங்களை எடுத்து விழா காணக் காத்திருந்த சில இயக்குநர்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X