ஷ்வேதாவின் 'பிகினி பிரளயம்'!

வர வர மேக்ஸிம் இதழில் அரைகுறை போஸ் கொடுப்பதற்கு பாலிவுட்டில் பெரும் போட்டியே ஏற்பட்டு வருகிறது. லேட்டஸ்டாக புது கிளுகிளுப்பை ஏற்படுத்தியுள்ளார் டிவி நடிகை ஷ்வேதா சால்வே.
இவர் கொடுத்துள்ள பிகினி உடை போஸ்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இப்படிப்பட்ட போஸ்களைக் கொடுத்தது தனக்கு எந்த வகையிலும் அவுசகரியமாக இல்லை என்று கூலாக கூறியுள்ளார் ஷ்வேதா.
சோனி டிவியில் ஒளிபரப்பான ஜலக் திக்லா ஜா என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு பிரபலமானவர்தான் ஷ்வேதா சால்வே. அந்த ஷோவில், ஷ்வேதாவின் கவர்ச்சிகரமான ஆட்டம் இந்தி ரசிகர்களிடையே ரொம்பப் பிரபலம். இந்தியத் தொலைக்காட்சியின் செக்ஸ் சைரன் என்ற பெயரும் ஷ்வேதாவுக்குக் கிடைத்தது.
தனது பிகினி பிரளயம் குறித்து ஷ்வேதா கூறுகையில், பிகினி அணிவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இது எனக்கு முதல் தடவை அல்ல. இன்னும் சொல்லப் போனால் இந்த உடைதான் எனக்கு ரொம்ப சவுகரியமாக இருக்கிறது.
எனக்கு வசதியில்லாத எதையும் நான் விரும்புவதில்லை. பிடித்த எதையும் அணியால் விடவும் மாட்டேன். எனவே விரும்பித்தான் பிகினி உடையை அணிந்து போஸ் கொடுத்தேன். பார்க்க அழகாகத்தானே இருக்கிறது, பிறகு எதற்கு இதை வியப்புடன் பார்க்கிறார்கள், பேசுகிறார்கள் என்று தெரியில்லை என்கிறார் ஷ்வேதா.
டிவியிலிருந்து இப்போது சினிமாவுக்கும் தாவியுள்ளார் ஷ்வேதா. தர்மேஷ் தர்ஷனின் பன்வ்ரா என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறாராம் ஷ்வேதா.
அங்கு வந்து என்ன செய்யப் போகிறாரோ?


Click it and Unblock the Notifications











