அழகர் மலையில் நடித்த இசைஞானி!

By Staff

IIlayaraja
இசைஞானி இளையராஜாவை நடிக்க வைக்க அவரது நெருங்கிய நண்பர் பாரதிராஜா உள்பட நிறைய பேர் முயன்றும் அவர் மறுத்துவிட்டார்.

ஆரம்ப நாட்களில் நிழல்கள் படத்திலும், பின்னர் சாதனை படத்திலும் ஒவ்வொரு காட்சியில் அவரை இசையமைப்பாளராகவே காட்டியிருப்பார்கள். புதுப்புது அர்த்தங்கள், கரகாட்டக்காரன் படங்களிலும் ஒரு காட்சியில் வருவார் ராஜா.

ஆனால் முதல்முறையாக, இளையராஜாவை ஒரு முழு பாடல் காட்சியிலும் நடிக்க வைத்துப் படமாக்கியிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளரும் இளையராஜாவின் பால்ய காலத் தோழருமான சங்கிலி முருகன், அழகர் மலை படத்துக்காக.

தான் படித்த பண்ணைபுரம் பள்ளிக்கு ராஜா செல்வது போலவும், பின்னர் திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்துக்குப் போய் தியானிப்பது போலவும் இந்தப் பாடல் காட்சியில் படமாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சங்கிலி முருகன் கூறுகையில், எனக்கும் ராஜாவுக்கும் உள்ள உறவு, ஒரு அண்ணனுக்கும் தம்பிக்குமான பாசம். என் படங்களை ராஜாவின் இசைதான் ஜெயிக்க வைத்தது. அந்த ராஜாவை கௌரவிக்க நான் செய்த சின்ன முயற்சி இது. உண்மையில் இது என் படத்துக்குதான் கவுரவம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X