ஏப்ரல் 15-ல் 'கோ'?
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியால் தள்ளி வைக்கப்படிருந்த படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகத் தொடங்குகின்றன.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படங்களில் ஒன்று கே வி ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள கோ. ஜீவா, கார்த்திகா-அஜ்மல் நடித்துள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் 15-ம் தேதி வெளியாகக் கூடும் என்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயன்ட் மூவீஸ் வெளியிடும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்துக்கு முன்பே சில படங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
எங்கேயும் காதல், வானம், மாப்பிள்ளை உள்ளிட்ட பெரிய படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. உலகக் கோப்பை முடிந்து, ஐபிஎல் போட்டிகள் வேறு ஆரம்பிப்பதால், இந்தப் படங்களை வெளியிடும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை தயாரிப்பாளர்கள்.
Comments


Click it and Unblock the Notifications