சிகாகோவில் 'தசாவதாரம் தோசை'!

கமல்ஹாசனின் தசாவதாரம் ஜூன் 12ம் தேதி வரவுள்ளதாக தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவச்சந்திரன் அறிவித்துள்ளார். இந்த நிலையில் சிகாகோவில் உள்ள கமல் ரசிகர்கள், தசாவதாரத்தை வித்தியாசமான முறையில் வரவேற்க ஆயத்தமாகியுள்ளனர்.
தசாவதாரம் என்ற பெயருக்கேற்ப 10 விதமான தோசைகள் அடங்கிய மேளாவுக்கு நேபர்வில்லியில் உள்ள நியூ சோழா ரெஸ்டாரன்ட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இந்த ஹோட்டலுக்கு சாப்பிட வருவோர் இந்த பத்து விதமான தோசையை ருசிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தசாவதாரம் பட டிக்கெட் விற்பனை செய்யப்டும். மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் இலவச ஆடியோ சிடியும் வழங்கப்படும்.
பே ஏரியாவைச் சேர்ந்த திருப்பதி பீமாஸ் இதேபோன்ற 'தோசை மேளா'வுக்கு ஜூன் 6, 7, 8 ஆகிய நாட்களில் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பான மேல் விவரங்களுக்கு 847-909-0527 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications











