நர்ஸ் நமீதா!

By Staff

Kamna Jethmalani
ஷக்தி சிதம்பரம் படம் என்றால் நமீதா டிஃபால்ட் ஆக இருப்பார். ஆனால் அவர் இயக்கும் ராஜாதி ராஜா படத்தில் நமீதா இல்லை. இருப்பினும் அந்தக் குறையை போக்கும் வகையில் படத்தில் வரும் காம்னாவின் கேரக்டருக்கு நமீதாவின் பெயரை வைத்து விட்டார் ஷக்தி.

மகா நடிகன், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ், வியாபாரி, சண்டை என தனது படங்கள் அனைத்திலும் தவறாமல் நமீதாவை நடிக்க வைத்தவர் ஷக்தி சிதம்பரம்.

ஷக்தி சிதம்பரம் படங்களின் சக்தியாக நமீதா இருந்து வந்தார். இந்த நிலையில் ராகவ லாரன்ஸ் நாயகனாக நடிக்க, ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகும் ராஜாதி ராஜா படத்தில் நமீதா இல்லை.

அவரை கற்பனை செய்து வைத்து உருவாக்கியிருந்த வேடத்தில் நமீதாவால் நடிக்க முடியவில்லை. இதையடுத்து அந்த கவர்ச்சிகரமான வேடத்திற்கு காம்னா ஜெட்மலானியை புக் செய்தார் ஷக்தி.

இப்படத்தில் நர்ஸ் வேடத்தில் நடிக்கிறார் காம்னா. இந்த கேரக்டருக்கு ஜில்லிப்பான பெயரை வைக்க தீர்மானித்த ஷக்தி, பலமுறை யோசித்தும் சரியான பெயர் அகப்படவில்லை. இறுதியில் நமீதாவின் பெயரையே வைத்து விட்டார் ஷக்தி.

இதைத் தொடர்ந்து நர்ஸ் நமீதா என்ற பெயரில் கவர்ச்சிகரமாக நடித்து வருகிறார் காம்னா.

படத்தில் படு கவர்ச்சிகரமாக வருகிறாராம் காம்னா. இவர் வேலை பார்க்கும் ஆஸ்பத்திரி டாக்டர்களைவிட காம்னாவிடம்தான் அனைவரும் ஊசி போட விரும்புவார்களாம். கியூவில் நின்று ஊசி போட்டுக் கொள்வார்களாம். இப்படி வைத்திருக்கிறாராம் காட்சிகளை ஷக்தி.

நமீதா இல்லாவிட்டாலும் படத்தில் அந்த பிளேவர் கண்டிப்பாக இருக்கும் என்கிறார் புன்னகையுடன் ஷக்தி. சிதம்பரமாச்சே, காலை மாற்றி நடனம் ஆடினாலும், டான்ஸ் டக்கராகத்தான் இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X