வருகிறார் ராதிகா காந்தி!

கொக்கி மூலம் ஹீரோயினாக வந்தவர் சஞ்சனா. இப்போது தனது பெயரை பூஜா காந்தி என மாற்றிக் கொண்டு கன்னடத்தில் மகா பிசியாக இருப்பவர்.
இவரது தங்கைதான் ராதிகா காந்தி. இவரும் இப்போது நடிகையாகி விட்டார். இரு படங்களில் கன்னடத்தில் நடித்து விட்டார்.
2வது படத்தில் சினிமா செய்தியாளராக நடித்துள்ளாராம். தனது லட்சியம் தமிழுக்கு வருவதுதான் என்கிறார் ராதிகா.
இதுகுறித்து ராதிகா கூறுகையில், அக்கா மாதிரி பெரிய நடிகையாக வர வேண்டும். அதுதான் எனது லட்சியம், ஆசை. நிறைய தமிழ்ப் பட வாய்ப்புகள் வருகின்றன.
அக்கா கோலிவுட் போய் அங்கிருந்து கன்னடத்துக்கு வந்தாங்க. நான் கன்னடத்திலிருந்து கோலிவுட் போகப் போறேன் என்கிறார்.
எங்கிருந்து எங்கு போனால் என்ன, நல்லா நடிச்சா சரி..
Comments


Click it and Unblock the Notifications