'நாக்' ரவியின் 'செல்' படம்!

ஸ்னேகாவுடன் முன்பு படு பிரபலமாக கிசுகிசுக்கப்பட்டவர் நாக் ரவி. நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை விநியோகித்துள்ளார். ஏகப்பட்ட படங்களுக்கு பைனான்ஸும் செய்துள்ளார்.
இந்த நிலையில், வித்தியாசமான ஒரு முயற்சியில் இறங்கியுள்ளார் நாக் ரவி. அதாவது செல்போன்களில் மட்டும் பார்க்கும் வகையிலான ஒரு குட்டிப் படத்தைத் தயாரித்துள்ளார் நாக் ரவி.
அந்தியூர் மர்மம் என்ற பெயரில் அந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு திகில் படமாம். செல்போன்களில் மட்டுமே இது உலா வரும், செல் போன்களில் மட்டுமே இதைக் காண முடியுமாம்.
தனது இந்த வித்தியாசமான முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நாக் ரவி.
நல்ல முயற்சி, கீப் இட் அப், நாக்!
Comments


Click it and Unblock the Notifications