நேற்று இன்று நாளை ஆடியோ!

By Staff

Netru Indru Nalai Movie still
ரவிகிருஷ்ணா பெரும் இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் நேற்று இன்று நாளை படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நடந்தது.

தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மகன் ரவிகிருஷ்ணா. இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இடையில் தேக்க நிலையை சந்தித்த ரவிகிருஷ்ணா தற்போது மீண்டும் நேற்று இன்று நாளை மூலம் கலக்க வந்திருக்கிறார்.

எஸ்.பி.ஆர். என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் நூகாராப்பு சூர்யபிரகாஷ் ராவ் இப்படத்தைத் தயாரிக்கிறார். லட்சுமிகாந்த் சென்னா இயக்கியுள்ளார்.

ரவிகிருஷ்ணாவுக்கு இதில் ஜோடியாக நடித்திருப்பவர் தமன்னா. இவர் ஏற்கனவே ரவிகிருஷ்ணாவின் கேடி படத்தில் ஜோடியாக வந்தவர். இப்போது 2வது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார்.

கருணாஸ், நாசர் உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர். எம்.ஜி.ஆர். படப் பெயராக இருந்தாலும், அந்தப் படத்திற்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையாம்.

ஒரு இளைஞனின் நேற்றைய கனவு, இன்றைய வாழ்க்கை, நாளைய எதிர்பார்ப்பு என்ன என்பதைச் சொல்லும் படம் இது என்கிறார் இயக்குநர் லட்சுமிகாந்த் சென்னா.

இப்படத்தின் பாடல் வெளியீடு சென்னை க்ரீன் பார்க் ஹோட்டலில் நடந்தது. இயக்குநர் தரணி முதல் சிடியை வெளியிட, இயக்குநர் லிங்குச்சாமி பெற்றுக் கொண்டார்.

ரவிகிருஷ்ணா, ஏ.எம்.ரத்னம், லட்சுமிகாந்த் சென்னா, தயாரிப்பாளர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X