அமீர்கான் தயாரித்த படத்தை ஆர்வத்துடன் பார்த்த பிரதமர்!

By Chakra

Peepli Live
விவசாயிகள் பிரச்சினையை அடிப்படையாக வைத்து பாலிவுட் நடிகர் அமீர் கான் தயாரித்த பீப்ளி லைவ் படத்தைப் பார்த்தார் பிரதமர் மன்மோகன் சிங்.

பீப்ளி லைவ் படத்தை பிரதமர் பார்க்க வேண்டும் என்று முன்னதாக விருப்பம் தெரிவித்து அழைப்பு விடுத்தார் அமீர்கான். இதற்கு பிரதமர் மன்மோகன்சிங் சம்மதித்தார். இதையடுத்து டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் நேற்று மாலை சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

பீப்ளி லைவ் திரைப்படத்தை பிரதமர் மன்மோகன்சிங் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார். அவரது மனைவி குர்சரன் கவுர் மற்றும் குடும்பத்தினர், நண்பர்களும் அவருடன் இந்தப் படத்தை பார்த்தனர்.

அமீர்கான், படத்தின் இயக்குனர் அனுஷ்ரிஷ்வி, வினியோகஸ்தர் ரோனி செர்வாலா, நடிகர்கள் ரஹ்வீர் யாதவ், ஓம்கார்தாஸ் மானிகபூர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஏற்கனவே, அமீர்கான் இந்த படத்தை பாரதீய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, மராட்டிய நவநிர்மான்சேனா தலைவர் ராஜ்தாக்ரே ஆகியோருக்கும் திரையிட்டுக் காட்டியுள்ளார்.

பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அவற்றை மையமாகக்கொண்டு பீப்ளி லைவ் கதை அமைக்கப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களுக்கு அமீர்கான் இந்த படத்தை திரையிட்டு காட்டுவதில் ஆர்வமாக உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X