»   »  ஆர்.டி.எஸ் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா

ஆர்.டி.எஸ் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா

Subscribe to Oneindia Tamil
Surya with Sameera Reddy

சூர்யாவையும், ஆர்யாவையும் நாயகர்களாக வைத்து இரு படங்களை இயக்கப் போகிறார் பிரபல கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர்.

தமிழ்த் திரையுலகின் பல பிரமாண்டப் படங்களின் வெற்றியில் ஆர்.டி.எஸ் என செல்லமாக அழைக்கப்படும் ஆர்.டி.ராஜேசகருக்கும் முக்கியப் பங்கு உண்டு. காக்க.. காக்க.. படத்தின் கேமரா மேன் இவர் தான்.

மிக அட்டகாசமான கேமராமேனான இவர் இப்போது விஷாலின் சத்யம், ஜூனியர் சிவாஜியின் சிங்கக்குட்டி உள்பட நான்கு படங்களில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அடுத்து இயக்கத்தில் குதிக்கிறார். சூர்யா மற்றும் ஆர்யாவை வைத்து இரு படங்களை அவர் இயக்கப் போகிறாராம்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கேமராமேனாக நிறையப் படங்களில் பணியாற்றி வருவதால், இயக்கத்திற்கு மாற கால தாமதம் ஆகி விட்டது.

எனது படங்கள் ஆக்ஷன் படங்களாக இருக்கும். ஆனால் அவை எனது ஸ்டைலில் இருக்கும். இளைஞர்களின் இதயங்களை நொறுக்கும் அளவில் அப்படங்கள் இருக்கும்.

சூர்யாவுடனும், ஆர்யாவுடனும் இரு படங்களை இயக்கவுள்ளேன். சூர்யா எனது நெருங்கிய நண்பர். அவருடன் சேர்ந்து பணிபுரிவது என்பது சந்தோஷமான விஷயம். அவர் தான் எனது திறமையை உணர்ந்து டைரக்டராகலாமே என்று ஊக்குவித்தார். எனவே அவருக்கு முதலில் நன்றி கூற வேண்டும்.

ஆர்யா இன்னொரு ஜென்டில்மேன். இப்போது உள்ள சிறப்பான ஆக்ஷன் ஹீரோக்களில் அவரும் ஒருவர் என்றார் அவர்.

முதலில் யாருடைய படத்தை ராஜசேகர் இயக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் முதல் படம் ஆரம்பித்து 3 மாதங்கள் கழித்து அடுத்த படத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளாராம்.

முதலில் கேமராமேனாக பணியாற்றி வரும் படங்களை முடிக்க ஆர்வமாக உள்ளார் ராஜசேகர். அதன் பின்னர்தான் இயக்கத்திற்கு வருகிறார். அவரது படங்களுக்கு அவரேதான் கேமராவாம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil