சஞ்சய் தத் சிக்கல் தீருமா?

By Staff

Sanjay with Manyata
பாலிவுட் நடிகர் மான்யதாவின், மனைவி மான்யதாவின் முதல் கணவர் மெஹ்ராஜ் ஷேக் தொடர்ந்துள்ள வழக்கில், நாளை சஞ்சய் தத்தும், மான்யதாவும் மும்பை கோர்ட்டில் ஆஜராகவுள்ளனர்.

மான்யதாவும், சஞ்சய் தத்தும் சமீபத்தில் ரகசியத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்தத் திருமணத்தைப் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. ேமலும், மெஹ்ராஜ்ஷேக்கும் இந்த திருமணத்தை எதிர்த்து மும்பை, பந்த்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

முறைப்படி விவாகரத்து செய்யாமல் மான்யதா, சஞ்சய் தத்தை திருமணம் செய்துள்ளார். இது செல்லாது என்று அவர் கோரியுள்ளார்.

இந்த வழக்கில் ஏப்ரல் 1ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சஞ்சய் தத், மான்யதாவுக்கு பந்த்ரா கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நாளை இருவரும் நேரில் ஆஜராகவுள்ளனர்.

ஏற்கனவே பந்த்ரா கோர்ட் இந்த வழக்கில், மான்யதாவும், ஷேக்கும் செய்து கொண்ட விவாகரத்து செல்லாது. காரணம், ஷேக் இந்த விவாகரத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் இந்த விவாகரத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க மான்யதா தவறி விட்டார் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை மான்யதாவும், சஞ்சய் தத்தும் கோர்ட்டில் ஆஜராகவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X