ஆயிரத்தில் ஒருவன்... இன்னும் முடியல!

இன்னும் கூட இறுதிக் கட்ட வேலைகள் சிலவற்றை பாக்கி வைத்திருக்கிறாராம் இயக்குநர் செல்வராகவன். எனவே அவற்றை முடிக்க லண்டனுக்குப் பறந்திருக்கிறார்களாம் படத்தின் இயக்குநரும் தொழில்நுட்ப வல்லுநர் குழுவும்.
ஏற்கெனவே வாமனன் தந்த சோதனையிலிருந்து மீண்டு வர வழி தெரியாமல் தவிக்கும் தயாரிப்பாளருக்கு, இது மேலும் கூடுதல் நிதிச் சுமையையும் மனச் சோர்வையும் தந்துள்ளதாம்.
ரூ.35 கோடிக்கும் மேல் முதலீடு செய்துவிட்டு, எப்படி அதை திருப்பி எடுக்கப் போகிறோம் என்று புரியாமல், சொந்த ரிலீஸ் என்ற மிகப் பெரிய அமில சோதனைக்குத் தயாராகி வருகிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.
செப்டம்பரில் ரிலீஸ் என்று முதலில் சொல்லி வந்தவர்கள், தீபாவளியைத் தாண்டினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் நொந்துபோய்.
Comments


Click it and Unblock the Notifications