திரிஷாவுக்குப் பதில் தமன்னா

By Staff

Tamanna
பரத்துடன் இணைந்து நடிக்க திரிஷா மறுத்து விட்டதால் அவருக்குப் பதில் தமன்னா அந்த வேடத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தியில் சூப்பர் ஹிட் ஆன படம் ஜப் வி மெட். கரீனா கபூர், ஷாஹித் கபூர் இணைந்து நடித்த படம். இப்படத்தை தமிழுக்குக் கொண்டு வருகிறார்கள்.

முதலில் தனுஷ், ஷ்ரியா நடிப்பார்கள் என்று கூறப்பட்டது. தற்போது தனுஷுக்குப் பதில் பரத் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவை கேட்டார்கள். ஆனால் அவர் சடாரென்று மறுத்து விட்டார்.

இதனால் திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் பரத்துடன் நடிக்க மறுத்ததற்கு எந்த தனிப்பட்ட காரணமும் கிடையாது. நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால்தான் நடிக்கவில்லை. மற்றபடி எதிர்காலத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார் திரிஷா.

இதையடுத்து இப்போது இந்த வேடத்திற்கு தமன்னாவை புக் செய்துள்ளனராம். கதையைக் கேட்டதும் தமன்னா ஓ.கே. சொல்லி விட்டாராம். இதையடுத்து அட்வான்ஸைக் கொடுத்து புக் செய்து விட்டனர்.

தமன்னா தற்போது ஆனந்த தாண்டவம், சூர்யாவுடன் அயன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஜப் வி மெட் தமிழ் ரீமேக்கும் சூப்பர் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதால் இந்த மூன்று படங்களும் ேசர்ந்து தமிழில் தன்னை பெரிய உயரத்திற்குக் கொண்டு செல்லும் என்ற பூரிப்பில் உள்ளார்.

இந்த பூரிப்போடு தனது சம்பளத்தையும் லேசாக உயர்த்தி விட்டாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X