மறுவெளியீடாக வரும் 'தா'!

By Chakra

Thaa Movie
தமிழ் சினிமாவின் தரமான படங்களுள் ஒன்ரு என பார்த்த எல்லோரும் வாய்விட்டு, கைதட்டிப் பாராட்டிய படம் 'தா'.

ஆனால் வெறும் பாராட்டு வசூலைக் குவித்துவிடுமா என்ன... தா படம் வந்ததும் தெரியவில்லை.. திரையரங்குகளை விட்டு தூக்கப்பட்டதும் தெரியவில்லை. தயாரிப்பாளர்களும் சேனல்களில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை விளம்பரம் செய்யத் தவறிவிட்டார்கள்.

பல பத்திரிகைகளில் விமர்சனம் வெளியாகிக் கொண்டிருந்த போதே இந்தப் படம் தூக்கப்பட்டுவிட்டதில் தயாரிப்பாளர், இயக்குநர், புதிதாக அறிமுகமான ஹீரோ என எல்லோருமே செம அப்செட்.

எனவே இப்போது மீண்டும் தா படத்தை ஜனவரியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் அதன் தயாரிப்பாளர்.

சமுத்திரக்கனியின் சிஷ்யர் சூர்யபிரபாகர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் புதுமுகம் ஸ்ரீஹரி, நிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். புதுமுகங்கள் என்று சொல்ல முடியாத அளவு யதார்த்தமாகச் செய்திருந்தனர்.

குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் இதுவரை எந்த சினிமாவிலும் பார்த்திராதது. தமிழ் ரசிகர்கள் மீதுள்ள நம்பிக்கையில் மீண்டும் வெளியிடுகிறார்கள். மறுவெளியீட்டின் போதாவது கவனிக்கப்படுமா 'தா'?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X