தென் மேற்கு பருவக்காற்று.!

By Chakra

Thenmerku Paruvakaatru
தேனி மாவட்டத்தில் குற்றப் பரம்பரையினர் என்று கூறப்பட்ட மக்களின் பாசப் போராட்டத்தை தென் மேற்கு பருவக்காற்று என்னும் பெயரில் படமாக எடுக்கிறார்கள்.

குற்றப்பரம்பரை எனும் பெயரில் இயக்குனர் பாரதிராஜா ஒரு படம் எடுக்க திட்டமிட்டு, அதற்கான வேலைகளில் இறங்கியது நினைவிருக்கலாம். இப்போதும் அந்தப் படத்தை எடுப்பது பற்றிப் பேசி வருகிறார்.

இப்போது, ஆங்கிலேயர்களால் குற்றப் பரம்பரையினர் என்று பட்டியலிடப்பட்ட மக்களைப் பற்றி சீனு ராமசாமி ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறார்.

பரத், பாவனா, சந்தியா நடித்த கூடல் நகர் படத்தை இயக்கியவர்தான் இந்த சீனு ராமசாமி. இதில் புதுமுகங்கள் சேது, வசுந்தரா ஆகியோருடன் சரண்யா, ஒளிப்பதிவாளர் தாஸ், ஸ்டில்ஸ் குமார், எழுத்தாளர் அஜயன்பாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படம் குறித்து சீனு ராமசாமி கூறுகையில், தென்மேற்கு பருவக்காற்று என்பது தேனி, கம்பம் பகுதி வாழ் மக்களின் வாழ்வை திசை திருப்புகிற வாழ்வாதாரங்களில் ஒன்று. அந்த மக்களின் வாழ்க்கையை பாசப் பிணைப்பை புது ரசனையோடு இதுவரை யாரும் சொல்லாத வகையில் பதிவு செய்கிறோம்.

சாமானிய மக்களின் பெருங் கருணையை கலாசார வடிவமைப்புடன் யதார்த்தமாக விவரிக்கும் படம் இது. அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களையே கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களாக நடிக்க வைக்கிறோம். தமிழ் சினிமாவின் சிறந்த கிராமத்துப் பதிவுகளில் இந்தப் படம் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்.

இசை- கார்த்திக்ராஜா. ஒளிப்பதிவு- செழியன். படத்தொகுப்பு- காசிவிஸ்வநாதன். தயாரிப்பு- ஜோதம் மீடியா ஒர்க்ஸ் கேப்டன் ஷிபு ஐசக்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X