2008ல் கலக்கிய பாட்டுக்கள்

By Staff

Kadalil Vilunden movie still
ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவை 2008ம் ஆண்டு கலக்கியிருந்தாலும் அவற்றையும் தாண்டி சில படங்களின் பாடல்கள் ரசிகர்களின் வாயை விட்டு இன்னும் கூட அகலாமல் அசை போட வைத்துக் கொண்டுள்ளன.

அப்படி கடந்த ஆண்டு ரசிகர்களை மயக்கிய சில பாடல்கள் ..

கண்கள் இரண்டால்...

சுப்ரமணியபுரம் படத்தில் இடம் பெற்ற இந்த கிளாசிகல் மெலடி, இன்னும் கூட மனங்களை விட்டுப் போகாமல் ட்யூன் வாசித்துக் கொண்டிருக்கிறது. ஜேம்ஸ் வசந்தனின் இசையில் உருவான இந்தப் பாடல், 80களின் கால 'ஃபீலை' நம் கண் முன்பு கொண்டு வந்து நிறுத்தியது.

இந்த ஆண்டின் மறக்க முடியாத அருமையான மெலடிப் பாடல்களில் இதுவும் ஒன்று.

கத்தாழைக் கண்ணாலே...

மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் இடம் பெற்ற இந்த குத்துப் பாடலும், ரசிகர்களை ஓவராகவே வதைத்த பாடல்.

பாடல் வரிகளும் சரி, பாடலைப் பாடிய குரலும் சரி, ஸ்னிக்தாவின் கேஷுவல் டான்ஸும் சரி, அத்தனையும் சேர்ந்து அதி மதுரமாக இந்தப் பாடலை தித்திக்க வைத்து சூப்பர் ஹிட் ஆக்கியது.

நாக்கு மூக்கா...

படம் வெளியாவதற்கு முன்பே வெளியாகி விட்ட காதலில் விழுந்தேன் படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல் இளசுகளின் லேட்டஸ்ட் தேசிய கீதமாக மாறிப் போயிருந்தது.

டீக் கடைக்குப் போனாலும் சரி, சலூனாக இருந்தாலும் சரி, செல் போன் ரிங் டோனாக இருந்தாலும் சரி, எங்கு போனாலும் இந்தப் பாட்டுத்தான் கொஞ்ச காலத்திற்கு.

இந்தப் பாட்டு ஒண்டிதான் காதலில் விழுந்தேன் படத்தைப் பற்றி மக்களிடையே பேச வைத்தது என்றால் மிகையில்லை.

டாக்சி டாக்சி..

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் அருமையான இசையில், சக்கரக்கட்டி படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடலும் இளசுகளின் மனதில் இம்சை பண்ணியது.

இந்தப் பாட்டுக்கும், நாக்கு மூக்கா பாட்டுக்கும்தான் கடும் போட்டியே. பாடல் சூப்பர் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இந்தப் பாடலின் விஷூவலை மீண்டும் ஒரு முறை ரீ ஷூட் செய்தார்கள்.

இவை பிளாக்பஸ்டர் பாடல்கள் என்றால் குருவி, யாரடி நீ மோகினி, பில்லா, தசாவதாரம், தாம் தூம் உள்ளிட்ட மற்ற படங்களிலும் கூட நல்ல பல பாடல்கள் இடம் பெற்று, ரசிகர்களின் காதுகளை ரம்யப்படுத்தின.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X