ராமராஜனுக்கு கைகொடுக்கும் வடிவேலு!

By Staff

Medhai
இசைஞானி இளையராஜா, காமெடி கிங் கவுண்டமணி இருவரின் துணையோடும் சக்கைப் போடு போட்டவர் ராமராஜன். கிராமங்களில் இன்றும் கூட இவரது படங்கள் விருப்பத்தோடு பார்க்கப்படுகின்றன.

அந்த நம்பிக்கையில்தான் இன்றும் அதிமுக கூட்டங்களில் ராமராஜனுக்கும் ஒரு இடம் கிடைக்கிறது.

இந்த நிலையில் மீண்டும் சினிமா முயற்சியில் இறங்கியுள்ளார் ராமராஜன். சில ஆண்டுகளுக்கு முன் அவர் நடிப்பில் துவங்கப்பட்ட படம் மேதை. ஆனால் இடையில் அப்படியே நின்றுபோனது.

இப்போது மீண்டும் இதன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. படத்தின் முக்கிய பலமாக காமெடியையே நம்பியுள்ளார் ராமராஜன். இந்த முறை அவருக்கு கை கொடுத்திருப்பவர் வடிவேலு.

தனது ஊர்க்காரர் என்ற பாசத்தினால், மிகுந்த சிரத்தையெடுத்து இந்தப் படத்துக்கு காமெடி செய்து கொடுத்துள்ளாராம் வடிவேலு.

'என் படங்களில் பெரிதும் பேசப்பட்ட கவுண்டமணியின் காமெடி ரேஞ்சுக்கு, இனி வடிவேலு காமெடியும் பேசப்படும்' என்கிறார் ராமராஜன்.

படத்தின் இயக்குநர் என்டிஜி சரவணன் கூறுகையில், "இந்தப் படத்துக்கு வடிவேலு மிகப் பெரிய பலம். நல்ல நேரத்தில் கைகொடுத்துள்ளார். படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துவிட்டது. வரும் மே மாதத்தில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

கொல்கத்தா மாடல் கவுசிகா, அஜய், ஹாசினி ஆகிய புதுமுகங்கள் இதில் அறிமுகமாகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X