ஹீரோவாகும் வடிவேலு மகன் சுப்பிரமணி!

By Staff

Vadivelu
தமிழ் சினிமாவில் வைகைப் புயல் என்று அழைக்கப்படும் வடிவேலுவுக்கு 23 வயதில் ஒரு மகன் இருக்கிறார் என்றால் நம்ப முடியவில்லை அல்லவா... ஆனால் உண்மை அதுதான்.

வடிவேலுவின் மூத்த மகன் பெயர் சுப்பிரமணி. 23 வயது இளைஞர். பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு கம்ப்யூட்டர் மற்றும் அனிமேஷன் துறையில் சில கோர்ஸ்கள் படித்துவந்தார்.

இவரை நடிக்க வைக்க சிலர் முயற்சி செய்தார்கள். சிலர் வடிவேலுவின் கால்ஷீட்டை சீக்கிரம் பெறுவதற்கான குறுக்கு வழியாகவும் இதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

இதையெல்லாம் புரிந்து கொண்ட வடிவேலு முதலில் சம்மதிக்கவில்லை. "நேரம் வரட்டும்...அப்புறம் பார்க்கலாம்ணே'' என்றே கூறிவந்தார்.

இப்போது சரியான வாய்ப்பு வந்திருப்பதால் தன் மகன் சுப்பிரமணியை கதாநாயகனாக அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளார் வடிவேலு.

நல்ல கதையாக அமைய வேண்டும் என்பதற்காக, தானே பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வருகிறாராம் வடிவேலு.

இதுகுறித்து அவர் கூறுகையில், "என் மகன் சுப்பிரமணியை நடிக்கச் சொல்லி நிறைய பேர் கேட்டார்கள்.

ஆனால் அவசரப்பட்டு அவனை இறக்கிவிட்டு, காமெடியாகிவிடக் கூடாது என்பதால் பொறுமாயாக காத்திருந்தேன்.

சமீபத்தில் நான் கேட்ட ஒரு கதை சுப்பிரமணிக்குப் பொறுத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

என்னைப்போல் நகைச்சுவை நடிகராக மட்டும் அல்லாமல், நடிப்பு, நகைச்சுவை, காதல், அடிதடி ஆகிய எல்லா அம்சங்களும் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் சுப்பிரமணி அறிமுகம் ஆகிறான்.

அவனை, தமிழக மக்களிடம் நான் ஒப்படைக்கிறேன். என் பிள்ளையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நான் இப்போது, பிஸியாக முன்னால் ஓடிக்க்கிட்டிருக்கிறேன். அவன் என் பின்னால் ஓடி வந்து, என்னை துரத்தி பிடிக்கட்டும். அல்லது எனக்கு முன்னே கூட ஓடட்டும்.

அவன் படத்தில் காமெடி நான் காமெடி செய்யும் நிலை வந்தால் சந்தோஷப்படுவேன்.

என் மார்க்கெட் நன்றாக இருக்கும்போதே சுப்பிரமணியை தமிழக மக்களிடம் ஒப்படைக்கிறேன். இனி அவங்க பார்த்துக்குவாங்க..." என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X