சுஷ்மிதாவுக்கு 'ஏ' எஸ்.எம்.எஸ்-இளைஞர் கைது!

பிடிபட்ட நபரின் பெயர் ஆம்பர் பிபின்சந்த். பி.காம் படித்துள்ளார். ஷேர் புரோக்கராக செயல்படுகிறார்.
இவர் சுஷ்மிதா சென்னின் செல் போனுக்கு தொடர்ந்து ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை செய்து வந்தார். மேலும், மும்பை கெர் பகுதியில் உள்ள சுஷ்மிதாவின் அலுவலகத்திற்கு அசிங்கமான படங்களை கூரியர் மூலம் அனுப்பி வைத்தார்.
இதையடுத்து சுஷ்மிதா, கெர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி, செல்போன் எண்ணைக் கண்டுபிடித்தனர். அதில் டெல்லியைச் சேர்ந்த ஆம்பர்தான் இந்த குசும்பத்தனத்திற்குக் காரணம் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து டெல்லி போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர். மேலும் மும்பையிலிருந்தும் ஒரு தனிப்படை டெல்லி விரைந்தது.
மும்பை போலீஸாரும், டெல்லி போலீஸாரும் இணைந்து நேற்று திலக் நகர் பகுதியில் வைத்து ஆம்பரைக் கைது செய்தனர். பின்னர் மும்பை போலீஸார் ஆம்பருடன் மும்பை திரும்பினர். அவரை பந்த்ரா கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











