Don't Miss!
- Sports
ஆரம்பமே இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்த நியூசி.. உம்ரான் அதிரடி நீக்கம்.. பிளேயிங் லெவன் மாற்றம்
- News
எல்லையில் வாலாட்டும் சீனாவுக்கு செக்.. லடாக்கில் 135 கி.மீட்டருக்கு சாலைகள்.. இந்தியா பக்கா பிளான்
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Finance
வருமான வரியை குறைக்க டிப்ஸ்.. கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
37 ஆண்டு..முக்கோண காதல் மூவி 'சாகர்'..காதலுக்காக தியாகம் செய்யும் கமல்..எஸ்பிபியின் முத்தான பாடல்கள்
சென்னை: கமல் ஹாசன் 1981 ஆம் ஆண்டு இந்திக்கு சென்றப்பின் அவர் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளியான படம் சாகர். முக்கோண காதல் கதை. கமலுக்கு பாடல்களை எஸ்பிபி பாடியிருப்பார். அத்தனையும் அருமையாக இருக்கும்.
கமல்ஹாசன் முன்னணி ஹீரோவாக தமிழில் இருந்த காலத்தில் இந்தியில் ஏக் துஜே கேலியே தொடங்கி பல படங்களை நடித்தார் சாகர் அதில் முக்கியமான படம். இந்தப்படம் வெளியாகி இந்த மாதத்துடன் 37 ஆண்டுகள் ஆகிறது.
இந்தப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின் டிம்பிள் கபாடியா மீண்டும் கதாநாயகியாக இளமையான தோற்றத்தில் கலக்கினார்.
கோச்சடையான் படத்திற்காக கடன் பெற்ற விவகாரம்: லதா ரஜினிகாந்த் மீதான வழக்கில் 3 பிரிவுகள் ரத்து

இந்தி திரையுலகில் கமல்ஹாசனின் ஆதிக்கம்
நடிகர் கமல்ஹாசன் தமிழில் முன்னணி ஹீரோவாக பல படங்களை நடித்து முடித்திருந்த நேரம். அவரி வைத்து தெலுங்கில் சரிதாவை அறிமுகப்படுத்தி மரோசரித்ரா என்கிற படத்தை பாலச்சந்தர் எடுத்தார். அது வெற்றிகரமாக ஓராண்டுக்கு ஓடியது. அதே படத்தை இந்தியில் ஏக்துஜே கேலியே என கமல், ரத்தியை வைத்து எடுத்தார். இந்தப்படத்தில் எஸ்பிபி அனைத்து பாடல்களையும் பாடி தேசிய விருதையும் பெற்றார். இதற்குப்பின் கமல்ஹாசன் இந்தியில் வரிசையாக படங்களை நடிக்க திடங்கினார். சனம் தேரி கசம், ஹே தோ கமால் ஹோகயா, ராஜ் திலக், கரீஷ்மா என பல படங்கள் நடித்தார். அதில் முக்கியமானது 1985 ஆண்டு வெளியான சாகர் திரைப்படமாகும்.

டிம்பிள் மறு பிரவேசம், பாபி ஜோடி மீண்டும் இணைப்பு
ரமேஷ் சிப்பி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ரிஷிகபூர், டிம்பிள் கபாடியா ஜோடி மீண்டும் இணைந்தது. டிம்பிள் கபாடியா பாபி படத்தில் அறிமுகமானார். இதில் தான் ராஜ்கபூரின் மகன் ரிஷி கபூரும் அறிமுகமானார். பாபி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் ஆகும். அப்போது புகழின் உச்சியில் இருந்த ராஜேஷ் கன்னா அவரை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் டிம்பிள் படத்தில் நடிக்கவில்லை. பின்னர் மணமுறிவு ஏற்பட்டது. அதன் பின் நீண்ட ஆண்டுகளுக்கு பின் தனது அறிமுக ஜோடி ரிஷிகபூருடன் சாகர் படத்தில் இணைந்தார் டிம்பிள். இந்தப்படத்தில் கமல்ஹாசனும் ஒரு ஜோடி. இது முக்கோண காதல் கதை ஆகும்.

மீனவ இளைஞராக துடிப்பான கமல்
மீனவ இளைஞரான கமல்ஹாசன் அதே பகுதியில் உணவு விடுதி நடத்தும் டிம்பிளின் குடும்ப நண்பர். டிம்பிள் கபாடியாவை அவர் காதலிப்பார். டிம்பிள் தைரியமான பெண் அடிக்கடி கமல்ஹாசனிடம் குறும்புத்தனத்தில் ஈடுபடுவார். இதை கமல் காதல் என நம்புவார். அப்போதுதான் அந்த ஊருக்கு திரும்புவார் செல்வந்தர் மகனான ரிஷிகபூர். கமல்தான் சார்மிங்காக இருப்பார் என்று பார்த்தால் இவர் அவரைவிட சார்மிங்காக இருப்பார். உணவு விடுதியில் ரிஷிகபூர் பாடல் பாட அதைப்பார்த்து டிம்பிள் மயங்குவார். ரிஷி கபூருக்கும் டிம்பிள் மீது காதல் வரும்.

முக்கோண காதல் கதை
இதை அறியாமல் கமல் டிம்பிள் மீது தீவிர காதலில் இருப்பார். ஒரு கட்டத்தில் கமல் இருவரது காதலையும் அறிந்துக்கொள்வார். டிம்பிளிடம் தன் காதலை சொல்லாமல் மறைத்து ரிஷிகபூரிடம் சேர்ந்து சந்தோஷமாக இருக்க வாழ்த்துவார். டிம்பிளின் அம்மாவிடம் அவர்கள் காதலைச் சொல்லி சேர்த்துவைக்க பேசுவார். அப்போது அவர் கமலின் காதலைப்பற்றி பேசுவார் அதற்கு கமல் அவர்கள் காதலிக்கிறார் அவர்களை சேர்த்து வைப்பதுதான் சரி என பேசுவார். இதை ரிஷிகபூர் கேட்டுவிடுவார்.

காதலுக்காக உயிர் தியாகம் செய்யும் கமல்
இதற்கிடையே ரிஷிகபூர் குடும்பத்தில் காதலுக்கு எதிர்ப்பு வரும் பாட்டி காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார். இதற்கிடையே இருவரது காதலையும் சேர்த்து வைக்க கமல் உறுதியெடுப்பார். ரிஷிகபூரின் பாட்டி தூண்டுதலில் ரவுடிகள் தாக்குவார்கள் அவர்களிடமிருந்து கமல் காதலர்களை காப்பாற்றி இருவரையும் சேர்த்து வைத்து புறப்படச்சொல்லும்போது ரிஷிகபூர் ஒப்புக்கொள்ளாமல் டிம்பிளை விரும்பும் கமல் தான் பொறுத்தமானவர் என்பார். டிம்பிள் அதிர்ச்சி அடைவார், அப்பத்தான் அவருக்கு கமலின் காதல் தெரியும். ஆனால் கமல் காதல் எல்லாம் இல்லை என மறுப்பார் இந்த வாக்குவாதம் நடக்கும்போதே வில்லன் ரிஷிகபூரை சுட முயல கமல் இடையில் புகுந்து குண்டை தன் மீது வாங்கி காப்பாற்றுவார். இறுதியில் உயிரை விடுவார்.

எஸ்பிபியின் அருமையான பாடல்கள்
இந்தப்படம் வர்த்தக ரீதியாக பெருவெற்றிப்பெறா விட்டாலும் பெரிதும் பாடல்களுக்காக பேசப்பட்டது. ஆர்.டி.பர்மனின் அற்புதமான இசையில் அத்தனை பாடல்களும் ஹிட். கமல்ஹாசனுக்கு இது சிறந்த படமாக அமைந்தது. இளமையான கட்டுடல் கொண்ட கமல் அழகழகான உடைகளில் வருவார், சச்மேரே யாருஹே எனும் பாடல் கமலுக்காக எஸ்பிபி பாடியிருப்பார். தன் காதலை மறைத்துக்கொண்டு வாழ்த்தி பாடும் பாடல். கமலுக்கு சொல்லியா கொடுக்கணும் அசத்தியிருப்பார். அந்தப்பாடல் இன்றளவும் ரசிக்கக்கூடிய பாடலாகும். "ஓமாரியா", "யுன்ஹி கேட் ரஹோ" போன்ற பாடல்களும் எஸ்பிபி பாடி ரசிக்கும்படியாக இருக்கும். இந்தப்படம் 1985 ஆம் ஆகஸ்டு மாதம் வெளியானது.