'வானத்'தை வசப்படுத்திய தயாநிதி அழகிரி!
சிம்பு - அனுஷ்கா - சோனியா அகர்வால் நடிக்கும் வானம் படத்தை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் வாங்கியுள்ளது.
விண்ணைத் தாண்டி வருவாயா வெற்றிக்குப் பிறகு, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் தயாரித்துள்ள படம் வானம். தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிப் படமான வேதம் படத்தின் தமிழ் ரீமேக் இது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நான்கு பாடல்களை அவர் முடித்துக் கொடுத்துள்ளார். இதில் ஏற்கேனவே எவன்டி உன்னப் பெத்தான் என்ற பாடலை தனி சிடியாக வெளியிட்டுள்ளனர். அந்தப் பாட்டும் இளைஞர்கள் மத்தியில் பரபரப்பாக வெற்றியடைந்துள்ளது.
இந்த நிலையில் வெளியீட்டுக்கு முன்பே படம் குறித்து 'நல்ல பேச்சு' இருந்ததால், இந்தப் படத்தை தயாநிதி அழகிரியின் க்ளவுட் நைன் மூவீஸ் வாங்கி வெளியிடுகிறது.
படப்பிடிப்பு முடிந்து, பின் தயாரிப்பு வேலைகள் நடந்துவரும் இந்தப் படத்தை ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











