மும்பையில் பிரபு தேவா - நயன் திருமணம்!

ஜெயம்ரவி நடிக்கும் எங்கேயும் காதல் படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். சன் பிக்ஸர் வாங்கியுள்ள இந்தப் படம் மே மாதம் திரைக்கு வருகிறது. அதற்கு அடுத்த மாதமே, அதாவது ஜூன் மாதம் விவாகரத்து கிடைத்துவிடும் பிரபு தேவாவுக்கும் அவர் மனைவி ரம்லத்துக்கும். அடுத்த சில தினங்களில் நயன் - பிரபு தேவா திருமணம் மும்பையில் நடக்கிறது.
நயன்தாரா, பிரபுதேவா காதலுக்கு உதவிய பிரகாஷ்ராஜ் தனது இரண்டாம் திருமணத்தை மும்பையில் தான் நடத்தினார் என்பது குறி்பபிடத்தக்கது.
திருமணத்தேதி முடிவாகிவிட்டதா என பிரபுதேவாவிடம் கேட்டபோது, லேசான புன்னகையுடன் கண்ணடித்து அமைதியானார். தனது குடும்ப விஷயங்களை பத்திரிகைளில் வெளிச்சம் போடுவதை அவர் விரும்புவதில்லையாம்.
ஆனால், அவரைத் தவிர, மற்ற எல்லாரும் அவர் குடும்ப விவகாரம் பற்றிப் பேசிவிட்டார்கள் என்பது அவருக்குப் புரியுமா!
Comments


Click it and Unblock the Notifications