twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    4 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினியின் சாதனையை முறியடித்த அஜித்தின் விவேகம்

    |

    சென்னை : 2017 ம் ஆண்டு டைரக்டர் சிவா இயக்கத்தில் வெளிவந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் விவேகம். அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பாலிவுட் நடிகரான விவேக் ஓபராய், தமிழில் அறிமுகமான படம் இது. ஆகஸ்ட் 24 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் வெளியாகி 4 ஆண்டுகள் முடிவடைந்து விட்டது.

    4 years ago ajiths vivegam teaser breaks the record of rajinis kabali teaser

    வேதாளம் படத்திற்கு பிறகு அஜித் - டைரக்டர் சிவா இணைந்த இரண்டாவது படம் இது. இந்த படம் விவேகம் என்ற பெயரிலேயே தெலுங்கிலும், கமாண்டோ என்ற பெயரில் கன்னடத்திலும் ரிலீஸ் செய்யப்பட்டது. வர்த்தக ரீதியாக 50 கோடி நஷ்டம் ஏற்படுத்திய படம் என கூறப்பட்டாலும் அஜித்தை மிகப் பெரிய அளவில் கொண்டாட வைத்த படம் இது.

    நடிகர் விவேக் மரணத்திற்கு காரணம் கொரோனா தடுப்பூசியா? விசாரணைக்கு ஏற்றது மனித உரிமை ஆணையம்! நடிகர் விவேக் மரணத்திற்கு காரணம் கொரோனா தடுப்பூசியா? விசாரணைக்கு ஏற்றது மனித உரிமை ஆணையம்!

    இது உலகத்தரத்தில் அமைந்த தமிழ் படம் என டைரக்டர் சிவா, முன்பே அறிவித்திருந்தார். அதே போல் ஆக்ஷன், ஃபிரண்ட்ஷிப், சென்டிமென்ட் என பலவற்றை கலந்து பல புதிய தொழில்நுட்பங்களை புகுத்தி கொடுத்திருந்தனர். இந்த படத்தின் 70 சதவீதம் ஆக்ஷன் த்ரில்லர் காட்சிகள் ஐரோப்பாவில் படமாக்கப்பட்டது. முதல் கட்ட படப்பிடிப்பு ஐரோப்பாவிலும், அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியிலும் நடத்தப்பட்டது. செர்பியாவிலும் பல இடங்களில் இந்த படம் படமாக்கப்பட்டது.

    அஜித்தின் ஆரம்பம் படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் கலர் சைக்கலாஜிக்கல் டெக்னிக் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்யப்பட்டது. அதாவது அஜித் கேரக்டரின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாக பச்சை, சிவப்பு நிற கலர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஷாட்டிலும் வெவ்வேறு கலர்கள் பயன்படுத்தப்பட்ட டெக்னிக்கும் இந்த படத்தில் கையாளப்பட்டிருக்கும்.

    அனிருத் இசையமைத்த இந்த படத்திற்கு கபிலன் வைரமுத்து, யோகி பி, ராஜ குமாரி ஆகியோர் பாடல்களை எழுதி இருந்தனர். இந்த படத்தின் இரண்டாவது சிங்கிளாக வெளியிடப்பட்ட தலை விடுதலை பாடலை டைரக்டர் சிவாவே அஜித்திற்காக எழுதி இருந்தார். மோட்டிவேஷன் பாடலாக அமைக்கப்பட்ட இந்த பாடல் அஜித்தின் 25 ஆண்டு கால சினிமா வாழ்க்கை, கடின உழைப்பிற்கு அர்ப்பணிக்கப்படுவதாக கூறி இருந்தனர்.

    விவேகம் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடலான சர்வைவா பாடல் 2017 ம் ஆண்டு ஜுன் 19 அன்று வெளியிடப்பட்டது. இந்த பாடலை 12 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்தனர். தலை விடுதலை பாடல் ஜுலை 10 ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது.

    விவேகம் படத்தின் டீசர் மே 11 ம் தேதி வெளியிடப்பட்டது. உடம்பில் குண்டுகள் துளைத்த காயங்களுடன், அஜித் டம்பிளிங் செய்வது போன்ற இந்த டீசர் அஜித் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இது வெளியிடப்பட்ட 12 மணி நேரத்தில் 5 மில்லியன் பார்வைகளை பெற்றது. ஆனால் அதற்கு முன் வெளியிடப்பட்ட ரஜினியின் கபாலி பட டீசர் 24 மணி நேரத்தில் தான் 5 மில்லியன் பார்வைகளை பெற்றது. அந்த சமயத்தில் அதிகமானவர்களால் விரும்பப்பட்ட இந்திய திரைப்படமாகவும் விவேகம் தான் இருந்தது.

    English summary
    Ajith starring Vivegam movie teaser of the movie Wisdom was released on May 11th. It received 5 million views in the 12 hours since its release. But the previously released Rajinikanth's kabali movie teaser got 5 million views in just 24 hours. Vivegam was also the most loved Indian film of the time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X