ஷ்ரியாவிடம் மயங்கிய சல்மான்!

By Sudha

Shriya
ஷ்ரியாவிடம் மயங்கியவர்களின் பட்டியலில் லேட்டஸ்டாக ருஷ்டியும் இணைந்துள்ளார்.

மழை புகழ் ஷ்ரியாவுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த ரசிகர் பட்டாளத்தில் இப்போது உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியும் இணைந்துள்ளார். அவரது சிபாரிசால், இப்போது தீபா மேத்தாவின் அடுத்த படத்திலும் ஷ்ரியா நடிக்கும் வாய்ப்பு ஓடோடி வந்துள்ளது.

தீபா மேத்தா இயக்கியுள்ள குக்கிங் வித் ஸ்டெல்லா படத்தில் நடித்துள்ளார் ஷ்ரியா. இந்த நிலையில் தீபா இயக்கப் போகும் அடுத்த படமான மிட்நைட் சில்ட்ரனிலும் நடிக்கும் வாய்ப்பு ஷ்ரியாவுக்குக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு வர முக்கியக் காரணமே சல்மான் ருஷ்டியாம்.

மிட்நைட் சில்ட்ரன் என்பது சல்மான் ருஷ்டி எழுதிய, இந்திய, பாகிஸ்தான் பிரிவினை குறித்த நூல். இதைப் படமாக்க ருஷ்டியிடம் அனுமதிகோரினார் தீபா. அவரும் அனுமதி அளித்தார். அத்தோடு கதையை அப்படியே படமாக்க வேண்டும் என்பதற்காக ஸ்டோரி டிஸ்கஷனிலும் அவர் பங்கேற்கிறார்.

மேலும் கதாபாத்திரங்களுக்குத் தேவையான கலைஞர் தேர்விலும் உடன் இருக்கிறார் ருஷ்டி. குறிப்பாக நடிகைகள் தேர்வை இவர்தான் செய்கிறாராம். கதையில் வரும் ஒரு கவர்ச்சிகரமான பாத்திரத்திற்கு ஷ்ரியாவை பரிந்துரை செய்தாராம் ருஷ்டி.

ஷ்ரியா கவர்ச்சியாக, அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடிக்கிறார். அவரையே இந்த பாத்திரத்திற்குப் போடலாம் என ருஷ்டி கூற, தீபாவும் ஓ.கே. சொல்லி விட்டாராம்.

விரைவில் இந்தியா வந்து ஷ்ரியா உள்ளிட்ட கலைஞர்களுடன் பேசப் போகிறாராம் தீபா மேத்தா.

இப்படத்தில், நந்திதா தாஸ், ஷபானா ஆஸ்மி, சோஹா அலிகான், கங்கனா ரனவத் என ஒரு பெரும் நட்சத்திரக் கும்பலே நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X