'முயலு'க்கு 5000 தயாரிப்பாளர்கள்!

By Shankar

உலகிலேயே முதல் முறையாக என்று சொல்லக் கூடிய அளவுக்கு தமிழ் சினிமா தயாரிப்பில் ஒரு சமாச்சாரம் நடந்திருக்கிறது. அதாவது போட்டோகிராபர்களும் வீடியோகிராபர்களும் மட்டும் இணைந்து ஒரு படத்தைத் தயாரிக்கிறார்ள். ஒருவர் இருவரல்ல... 5000 பேர்!

படக் கம்பெனிக்குப் பெயரே 'போட்டோ அண்ட் வீடியோகிராபர்ஸின் பி அண்ட் வி எண்டர்டெயின்மெண்ட் லிட்' என்று வைத்திருக்கிறார்கள்.

இந்த நிறுவனத்தின் முதல் படத்துக்குப் பெயர் முயல். முயல் என்றால் சுசுறுவென ஓடித் திரியும் முயல் என்ற அர்த்தம் மட்டுமல்ல... முயற்சி என்ற அர்த்தமும் உண்டு.

கண்டுபுடி கண்டுபுடி, புழல் படங்களில் நடித்த முரளி இந்தப் பசத்தில் ஹீரோவாகவும், போராண்மை படத்தில் நடித்த சரண்யா நாயகியாகவும் நடிக்கிறார்கள். ராஜ்குமார், பிரபு, மீரா கிருஷ்ணன், ஷிவானி உள்பட பலரும் நடிக்கிறார்கள்.

இதுவரை தங்கள் வாழ்க்கையில் எந்த துன்பத்தையும் அனுபவித்திராத மூன்று நண்பர்கள், கல்லூரிப் படிப்பு முடிந்து ஏதாவது ஒரு பிஸினஸ் பண்ணலாம் என இறங்கும்போது, அவர்களின் வாழ்ககையையே புரட்டிப் போடுகிறது ஒரு சம்பவம். தங்களுக்கு வந்த அந்த கஷ்டம் வேறு யாருக்கும் வராமல் இருக்க அவர்கள் செய்யும் முயற்சிகள்தான் இந்த முயல்.

மதுரை டு ஆண்டிப்பட்டி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி போன்ற வித்தியாசமான முயற்சிகளில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய எஸ்பிஎஸ் குகன் இயக்கும் படம் இது. சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி படத்தை ஸ்டில் கேமராவில் படமாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர் குகன் என்பது குறிப்பிடத்தக்கது. படத்துக்கு ஜேவி இசையமைக்கிறார்.

5000 போட்டோ மற்றும் வீடியோகிராபர்கள் உருவாக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று ஏவிஎம் பழைய. பிள்ளையார் கோயிலில் நடந்தது. இன்றே படத்தின் பாடல்களையும் வெளியிட்டு புதுமை செய்தனர்.

More from Filmibeat

Read more about: tamil cinema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X