நாக்பூர் பட விழாவில் நான் கடவுள், மைனா
நாக்பூரில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ஏராளமான தமிழ்ப் படங்கள் கலந்து கொண்டுள்ளன.
பிப்ரவரி 4ம் தேதி இந்த திரை விழா தொடங்கியது. 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தமிழ் சினிமாவிலிருந்து நான் கடவுள், மைனா, சரோஜா, முதல் முதல் முதல் வரை, காதல், இளைஞன் ஆகிய படங்கள் கலந்து கொண்டுள்ளன.
நான் கடவுள் இசை, இயக்கம், நடிப்பு என பல துறையிலிரும் விமர்சகர்களின் பாராட்டுக்களைக் குவித்த படம். பாலாவுக்கு தேசிய விருது வாங்கித் தந்த படம். அதேபோல மைனாவும், அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுக்களையும் அள்ளிக் கொண்ட படம்.
இந்த விழா நாக்பூரில் நடைபெறும் 2வது சர்வதேச பட விழாவாகும். தமிழ்த் திரையுலக பிரபலங்கள் சிலரும் கூட இதில் பங்கேற்றுள்ளனர். பட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் முன்னாள் நாயகி குஷ்புவை கூப்பிட்டுள்ளனர். அவர்தான் சிறப்பு விருந்தினராம்.
More from Filmibeat
நாக்பூர் இந்திய திரைப்பட விழா நாக்பூர் பட விழாவில் நான் கடவுள் மைனா naan kadavul and myna participate in nagpur film festival nagpur indian film festival


Click it and Unblock the Notifications











