twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா

    |

    சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் உருவான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வெளியாகி சுமார் 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த படத்தில் நடித்த கதிரும் அனிதாவும் இன்றைக்கும் பலராலும் மறக்க முடியாத காதலர்களாகவே இருக்கின்றனர்.

    7/ஜி ரெயின்போ காலனியில் பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை. நம் ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் புகுந்து கொண்டு அதில் இருக்கும் உணர்ச்சிகளையும், ஏக்கங்களையும், சோகங்களையும் அப்படியே பாடல் வரிகளாக ஆக்கிய அந்த வித்தகரை நம் நெஞ்சம் உள்ள வரை மறக்க முடியாது.

    7/G Rainbow Colony 15 year Celebration

    15 ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும் கூட, இன்றும் நம் காதுகளில் தேனை போல தித்திக்கிறது 7G ரெயின்போ காலனி திரைப்பட பாடல்கள். இந்த பாடல்கள் இப்படி அமைவதற்கு யார் காரணம். பாடலின் வரிகளா, இசை அமைப்பாளரா, நடிகர் நடிகையா, இயக்குனரா.

    இவர்களில் யாராவது ஒருவரை மட்டும் பாராட்டினால் அதில் நியாயம் இருக்காது. இவர்களின் ஒட்டுமொத்த கூட்டணியும் தான் அந்த படத்தின் பாடல்களை இன்றும் நம் காதுகளுக்கு விருந்தாக படைப்பதற்கு காரணம்.

    வெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபுவெங்கட் பிரபுவின் வெப்சீரிஸில் நடிக்கும் காஜல் அகர்வால் - இணைந்த யோகி பாபு

    அந்த படத்தின் பெயரிலேயே அது ஒரு வானவில் என்று இருக்கும் போது, நாம் வேறு என்ன வார்த்தை சொல்லி பாடல்களை வர்ணிக்க. பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் நம் நெஞ்சை கிள்ளி எறிவது போல அமைந்ததற்கு, நாம் அந்த மாமேதை ந.முத்துக்குமாருக்கு தான் கோடான கோடி நன்றிகளை தெரிவிக்க வேண்டும்.

    7/G Rainbow Colony 15 year Celebration

    நம் ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் புகுந்து கொண்டு அதில் இருக்கும் உணர்ச்சிகளையும், ஏக்கங்களையும், சோகங்களையும் அப்படியே பாடல் வரிகளாக ஆக்கிய அந்த வித்தகரை நம் நெஞ்சம் உள்ள வரை மறக்க முடியாது. ஒரு சின்ன சின்ன நொடிப் பொழுதில் நடக்கக் கூடிய சலசலப்பை கூட விட்டு வைக்கவில்லை இந்த கவிஞன்.

    நினைத்துப் பார்த்தாலே நம் நினைவில் ஒட்டிக்கொள்ளும் இந்த வானவில் வர்ணங்கள். யுவனின் இசை ஒரு புறமும், ந.முத்துக்குமாரின் பாடல் வரிகள் ஒரு புறமும், நம்மை மாறி மாறி சுகமாய் தாக்குகின்றன. நம் கண்களில் இருந்து கண்ணீரை நம் அனுமதியில்லாமலேயே வெளியேற்றுகின்றனர் இந்த இருவரும். அந்த இருவரின் அழிவில்லா படைப்புகளுக்கு என்றும் நாங்கள் அடிமைகளே.

    English summary
    It has been almost 15 years since the film 7/G Rainbow Colony starring Ravi Krishna and Sonia Agarwal directed by Selvaraghavan was released. All of the songs in the film, the heart, the emotions, the longings and the sadness that are in our hearts, can not forget the tragedy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X