எங்கேயும் காதல்... வாங்கியது சன் டிவி!
பிரபு தேவா இயக்கத்தில், ஜெயம் ரவி - ஹன்ஸிகா மோத்வானி நடித்துள்ள எங்கேயும் காதல் படத்தை சன் டிவி வாங்கியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்தப் படம் முடிந்து சில மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் போட்டிகல் காரணமாக இப்போது ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படம் முழுக்க பாரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்தப் படத்தைப் பார்த்த சன் பிக்சர்ஸ் நிர்வாகிகள், இதனை தங்கள் பேனரில் வெளியிட விருப்பம் தெரிவித்ததால், வெளியீட்டு உரிமையை அவர்களுக்கு கொடுத்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம்.
தனுஷ் நடித்த மாப்பிள்ளை படமும் சன் டிவி வசம்தான் உள்ளது. அப்படியெனில் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வருமா... என்ற கேள்வியுடன் காத்திருக்கிறது கோடம்பாக்கம்.
Comments


Click it and Unblock the Notifications