90களில் நம் மனம் கவர்ந்த குழந்தை நட்சத்திரங்கள் !

சென்னை : தமிழ் திரைப்படத்துறையில் மட்டுமல்லாமல் இந்திய திரைப்படத் துறைக்கும் 1990ல் வந்த படங்கள் மிகப்பெரிய ஒரு பொற்காலமாக பலராலும் கருதப்படுகிறது.

இவ்வாறு 1990-களில் வந்த பல படங்களில் பலரும் நடித்து நம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்து வந்த நேரத்தில் அதில் நடித்த ஒரு சில குழந்தை நட்சத்திரங்களும் நம் மனதை கவர்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் 90 களில் தமிழ் திரைப்படத்துறையில் அனைவராலும் ரசிக்கப்பட்டு மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இரண்டு குழந்தை நட்சத்திரத்தை பற்றி நாம் இங்கு காண்போம்.

மூன்று வயதிலேயே

மூன்று வயதிலேயே

மாஸ்டர் மகேந்திரன் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகர் மகேந்திரன். இவர் 90களில் நடித்து வந்த மிகப்பிரபலமான ஒரு குழந்தை நட்சத்திரம் ஆவார். தனது மூன்று வயதிலேயே நடிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் ஆறு மொழிகளில் நடித்து மிகவும் பிரபலம் ஆனார் இந்தச் சுட்டிக் குழந்தை.

முட்டக்கண்ணு

முட்டக்கண்ணு

இவரின் துடிதுடிப்பான நடிப்பும், முட்டக்கண்ண முழியும், வசன உச்சரிப்பும் இவரை மிகப்பெரிய குழந்தை நட்சத்திரமாக பல வருடங்களாக தூக்கி வைத்துக் கொண்டாடி வந்தது தமிழ் சினிமா. இவர் மிக அதிகமாக இயக்குனர் பாண்டிராஜன் படங்களில் நடித்து மிகவும் புகழ் பெற்றார். மேலும் நாட்டாமை படத்தில் பஞ்சாயத்து காட்சியில் சாட்சி சொல்லும் சிறுவனாக இவர் நடித்த காட்சி இன்றளவும் பலராலும் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

அவதாரம்

அவதாரம்

இவ்வாறு நாம் ரசித்து வந்த இந்த சூப்பர் டாலெண்டட் குழந்தை நட்சத்திரம், தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்து வருகிறது. இவ்வாறு குழந்தையாக வந்து நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த மகேந்திரன் 2013ஆம் ஆண்டு வெளியான விழா என்ற படத்தின் மூலம் நாயகனாக உருவாகி அனைவருக்கும் காட்சியளித்தார். இவ்வாறு கதாநாயனாக உருவெடுத்த மகேந்திரன் விழா, வெண்டை திட்டு வாசல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

எதிர்பார்ப்புடன்

எதிர்பார்ப்புடன்

மேலும் இவர் தற்போது நடிகர் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக நம் அனைவரையும் கவர்ந்த மாஸ்டர் மகேந்திரன், ஹீரோ மகேந்திரனாகவும் நம் அனைவரையும் ரசிக்க வைப்பார்
என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

க்யூட்டான நடிப்பில்

க்யூட்டான நடிப்பில்

இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி மற்றும் ராமா நாராயணன் இயக்கிய துர்கா போன்ற படங்களின் மூலம் பேபி ஷாமிலியாக இந்தியா முழுவதிலும் உள்ள அனைவரையும் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் கவனத்தை ஈர்த்தார். இவர் அஞ்சலி படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற தேசிய விருதையும் பெற்றுள்ளார். தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினியின் தங்கையான இவர் தற்பொழுது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

விருது

விருது

இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக நம் அனைவரையும் கவர்ந்து வந்த பேபி ஷாமிலி கதாநாயகியாக தெலுங்கில் ஓய் என்ற படத்தின் மூலம் தனது கதாநாயகி அறிமுகத்தைக் கொடுத்து அதற்காக சிறந்த அறிமுக கதாநாயகி என்ற விருதையும் பெற்றுள்ளார்.

வீர சிவாஜி

வீர சிவாஜி

மேலும் இவர் தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த வீர சிவாஜி என்ற படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு குழந்தை நட்சத்திரமாக இருந்து நம் அனைவரின் மனங்களையும் கொள்ளையடித்த இவர்கள் இருவரும் தற்போது வளரும் நட்சத்திரங்களாக வளர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X