இவரது லென்ஸ் வழியே நமக்குத் தெரிந்த இயற்கை.. 94 வயதிலும் இயற்கைக்காக உழைக்கும் டேவிட் அட்டன்பாரோ!

லண்டன்: இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து இயற்கை காதலனாகவும், உலகில் உள்ள அனைத்து விதமான காடுகளின் வனமகனாகவும் வாழ்ந்து வருகிறார் டேவிட் அட்டன்பாரோ.

பிபிசி தொலைக்காட்சி நிறுவனத்தில் பணி புரிந்து வரும் டேவிட் அட்டன்பாரோ கேமரா வழியாக பதிவான பலவிதமான இயற்கை அதிசயங்களை தான் உலகம் முதன்முதலாக தொலைக்காட்சி பெட்டிகளில் கண்டு ரசிக்கத் தொடங்கியது.

94 Not out: David Attenborough special!

கடந்த மே 8ம் தேதி டேவிட் அட்டன்பாரோ தனது 94வது வயதை வெற்றிகரமாக கடந்து, இயற்கை தான் ஆற்ற வேண்டிய கடமைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

வெறும் புகைப்படக் கலைஞராக மட்டுமின்றி, உலகத்தை சுற்றிய அனுபவங்களை தொகுத்து இவர் எழுதிய லைஃப் ஆன் எர்த், லைஃப் இன் கோல்ட் பிளட், தி லைஃப் ஆஃப் மம்மல்ஸ், தி லைஃப் ஆஃப் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல புத்தகங்கள் உலகளவில் பிரசித்தி பெற்றுள்ளன.

94 Not out: David Attenborough special!

பனிக் கரடிகளின் வாழ்க்கை தொடங்கி பல்லுயிர்களின் வாழ்க்கைகளை தனது கேமரா லென்ஸ் மூலம் உலகுக்கு படம் பிடித்து காட்டியவர் டேவிட் அட்டன்பாரோ.

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் வரும் பியர் கிரில்ஸுக்கெல்லாம் இந்த இயற்கை வாழ்வியலில் இவர் காட் ஃபாதர் என்பது குறிப்பிடத்தக்கது.

காற்று மாசு காரணமாக நம் பூமி எப்படி அழிந்து வருகிறது என்றும், அதற்கு நாம் எந்தளவில் காரணமாக இருந்து வருகிறோம் என்றும் தெளிவாக விளக்கிக் கூறி வருகிறார்.

94 Not out: David Attenborough special!

நம்மை தாங்கும் இந்த பூமியை நாம் எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும், அதிக ஆசை காரணமாக மனித இனம் செய்த தவறுகள் என பல வற்றையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

62 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிளானட் எர்த் என இவர் இயக்கிய டாக்குமென்ட்ரி திரைப்படம் ஒவ்வொரு மனிதனும் காண வேண்டிய பொக்கிஷமாகும். கருப்பு வெள்ளை காலம் தொடங்கி 4K டெக்னாலஜி, 3டி தொழில்நுட்பம் என பல பாஃப்டா விருதுகளை அள்ளிய இந்த மாமேதை இன்னும் பல காலம் இருந்து இந்த இயற்கையை பற்றி நமக்கு மேலும் விளக்கட்டும். டேவிட் அட்டன்பாரோ குறித்த மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள இந்த வீடியோவை க்ளிக் செய்யுங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X