Don't Miss!
- Finance
ஊழியர்கள் சம்பளத்தை இரட்டிப்பாக்கும் மைக்ரோசாப்ட்.. என்ன காரணம்?
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மலையாள படத்திலும் காதலை சொல்ல பயன்படும் 96 பட இசை.. தமிழ் பாடல்கள், வசனங்கள் நிறைந்த கேரள படங்கள்!
சென்னை: சந்திரமுகியின் மலையாள முன்னோடியான மணிச்சித்திரதாழு முதல் சமீபத்தில் ஒடிடியில் வெளியான மோகன்லாலின் ப்ரோ டாடி படம் வரை மலையாள சினிமாக்களில் தமிழ் பாடல்களும், தமிழ் வசனங்களும் வெகுவாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மலர் டீச்சர் முதல் ப்ரோ டாடி படத்தில் இடம்பெற்ற நடிகர் சார்லியின் போர்ஷன் வரை மலையாள படங்களில் தமிழ் துள்ளி விளையாடி வருகிறது.
இதற்கு காரணம் கேரளாவில் தமிழர்களின் ஆதிக்கம் இருப்பது ஒருபுறம் இருந்தாலும், பிற மொழி படங்களின் சிறப்பை மலையாள சினிமா உலகம் மதிப்பதும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக
ஓடிடியில்
வெளியாகும்
மோகன்லாலின்
ப்ரோ
டாடி
...
ரிலீஸ்
தேதி
வெளியானது

96 இசைக்கு வருவோம்
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான காதல் காவியம் 96 படம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த படத்தின் இசை தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ள ப்ரோ டாடி படத்தில் பிருத்விராஜின் மாமனார் குரியன் தனது முன்னாள் காதலி மீனாவை நினைக்கும் சமயங்களில் எல்லாம் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

காதலை சொல்ல
சினிமாவில் காதலை சொல்ல இனி இந்த இசையை அவ்வளவு அழகாக பயன்படுத்தலாம் என்பதை இயக்குநர் பிரித்விராஜ் சுகுமாறன் தனது ப்ரோ டாடி படத்தில் கையாண்ட விதம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி உள்ளது. ஒரு மலையாள படத்தில் தமிழ் பாடலின் இசை வந்தாலே அவர்களுக்கு புரியும் என இயக்குநர் நினைத்து வைக்கிறார் என்றால் அந்த 96 பாடலின் தாக்கம் கேரள ரசிகர்கள் மத்தியில் எந்தளவு நிறைந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்..

மலையாளி
இன்னொரு புறம் யோசித்துப் பார்த்தால் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா ஒரு மலையாளி என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு அசுரவித்து எனும் மலையாள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் கோவிந்த் வசந்தா. ஏகப்பட்ட மலையாள படங்களில் இசை பணிகளை ஆற்றி வந்த அவர் 2017ம் ஆண்டு சோலோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். 2018ம் ஆண்டு அவர் 96 படத்திற்கு இசையமைத்தது வரலாறாக மாறிப் போனது.

தமிழ் வசனங்கள்
பிரேமம், டிரான்ஸ் போன்ற பெரும் வெற்றிப் பெற்ற பல மலையாள படங்களில் தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. ப்ரோ டாடி படத்தில் பெங்களூருவில் பிரித்விராஜ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் லிவிங் டுகெதரில் இருக்கும் போர்ஷனுக்கு கீழ் நடிகர் சார்லி இருப்பதும் அவர் தமிழில் பேசும் வசனங்களும் தமிழ் ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்திழுக்க காரணமாக அமைந்துள்ளன.

மலையாள படங்களில் தமிழ் பாடல்கள்
மோகன்லால், ஷோபனா நடிப்பில் வெளியான மணிச்சித்திரதாழு படத்தில் ஷோபனாவுக்கு பிடிக்கும் 'சந்திரமுகி' பேயே தமிழ் பேய் தான் என்பது குறிப்பிடத்தக்கது. "ஒருமுறை வந்து பார்ப்பாயா" என்ற தமிழ் பாடல் அந்த படத்தில் இடம்பெற்றிருக்கும். பிரேமம் படத்தில் மலர் டீச்சரும் நிவின் பாலியும் காதலிக்கும் லவ் டிராக் பாடலான "சின்ன சின்ன பார்வை கொஞ்சி கொஞ்சி பேசி துள்ளி செல்லும் என் அழகே" பாடலில் தமிழ் மற்றும் மலையாளம் அழகாக கலந்திருக்கும். இப்படி மலையாளத்தில் இடம்பெற்ற தமிழ் பாடல்களின் லிஸ்ட்டை சொல்லிக் கொண்டே போகலாம்.

மாமா உன் பொண்ணை கொடு
நடிகர் பிரித்விராஜ் இயக்கி நடித்து ஒடிடியில் வெளியாகி இருக்கும் ப்ரோ டாடி படத்தில் 96 பட மியூசிக் மட்டுமின்றி திருமணத்தில் வாசிக்கப்படும் பேண்ட் மியூசிக்கில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ராஜாதி ராஜா படத்தில் இடம்பெற்ற "மாமா உன் பொண்ணை கொடு" பாடல் இசை தான் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் தமிழுக்கும் மலையாளத்துக்கும் இப்படியொரு கனெக்ட் இருப்பது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று தான். தமிழ் ரசிகர்கள் பிரேமம் மலையாள வெர்ஷன் படத்தையே 250 நாட்களுக்கு மேல் ஓடவைத்தது த்ரிஷ்யம் 2வை கொண்டாடியது எல்லாமே அதே பாண்டிங்கின் விளைவு தான்.