கூட்டத்தில் தனித்து செயல்பட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் இன்று பெரிய நடிகர்... சுந்தர்.சி சுவாரஸ்ய தகவல்

சென்னை: எந்த விதமான சினிமா பின் புலனும் இல்லாமல் இப்போது உச்சத்தில் இருக்கும் பெரிய நடிகர்கள் அனைவரும் ஒரு காலத்தில் முகம் தெரியாத ஜூனியர் ஆர்டிஸ்ட்களாக இருந்தவர்கள்தான்.

கதாநாயகர்களாக நடிக்கும் விஜய் சேதுபதி, விமல், விதார்த் கூட பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் மக்கள் பார்த்திருக்கக் கூடும்.

அந்த வகையில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களோடு ஒருவராக இருந்தவர் இயக்குநர் சுந்தர் சி என் கண்ணில் பட்டு பிற்காலத்தில் பெரிய நடிகர் ஆகியுள்ளார்.

லொள்ளு சபா

லொள்ளு சபா

இயக்குநர் ராம் பாலா இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்து தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த லொள்ளு சபாவை யாரால் தான் மறக்க முடியும். அதில் நடித்த சந்தானம், ஜீவா, சுவாமிநாதன், மாறன், மனோகர் போன்றவர்கள் இன்று பிரபலமான சினிமா நடிகர்கள். ஒரு முறை லொள்ளு சபா ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ஒரு நபர் சென்றுள்ளார். அவரது வித்தியாசமான தோற்றத்தை கண்ட இயக்குநர் ராம் பாலா அதில் சிறிய வேடங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். அவரது நகைச்சுவை டைமிங் சென்சை கவனித்து ஸ்கிரிப்ட் டிஸ்கஷனிலும் சேர்த்துக் கொண்டார். அவர்தான் இப்போது முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபு.

கலகலப்பு வாய்ப்பு

கலகலப்பு வாய்ப்பு

யோகி படத்தில் முதல் முறையாக நடித்ததால், தனது பெயரான பாபுவுடன் யோகியையும் சேர்த்துக் கொண்டார். பின்னர் பையா, வேலாயுதம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை இயக்குநர் சுந்தர் சி டிவியில் ஒரு பாடலை பார்த்துக் கொண்டிருந்தபோது அந்தப் பாடலில் முன்னணி நடிகர்களை விட பின்னே இருக்கும் ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆர்வமாக நடித்துக் கொண்டிருப்பதை கவனித்திருக்கிறார் அந்த படத்தைக் கூட சுந்தர் சி பார்க்கவில்லையாம்.

காட்சிகள் கூடியது

காட்சிகள் கூடியது

கலகலப்பு படத்தை தான் இயக்கிய போது அதில் ஒரு கதாபாத்திரத்தில் அந்த நபர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அந்த பாடலை குறிப்பிட்டு அந்த நபரை அழைத்து வரச் சொல்லி இருக்கிறார். அப்போது அவர் பெயர் யோகி பாபு என்று கூட தெரியாதாம். முதலில் ஒரு காட்சியில் நடிக்கத் தான் யோகி பாபுவை அழைத்திருக்கிறார். ஆனால் அந்த ஒரு காட்சிக்கு அவர் எடுத்த மெனக்கடல்களை பார்த்து அவருடைய கதாபாத்திரம் ஆங்காங்கே வருவது போல் காட்சிகளை மேற்கொண்டு சேர்த்து அந்த படத்தில் நடிக்க வைத்தாராம் சுந்தர்.சி.

எட்டாவது கூட்டணி

எட்டாவது கூட்டணி

கலகலப்பு திரைப்படத்தை தொடர்ந்து அரண்மனை சீரிஸ், கலகலப்பு இரண்டாம் பாகம், வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்சன் என்று தான் இயக்கிய பெரும்பாலான படங்களிலும் யோகி பாபுவை நடிக்க வைத்தார் சுந்தர் சி. இப்போது இயக்கிக் கொண்டிருக்கும் காஃபி வித் காதல் படத்திலும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X