நிறைய நபர்கள் என்னை நம்பி அந்த ஊருக்குச் சென்று மோசமாக திட்டினார்கள்... வெங்கட் பிரபுவிற்கு வந்த சோதனை

சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபு தற்சமயம் நாக சைத்தன்யாவை வைத்து தெலுங்கில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.

முதல் முறையாக இசைஞானி இளையராஜா அவர்கள் வெங்கட் பிரபு படத்திற்கு இசையமைக்கிறார். அவருடன் சேர்ந்து யுவன் சங்கர் ராஜாவும் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தனது படத்தை பார்த்து அதில் வருவது போல நடக்கும் என்று சில மனிதர்கள் நம்பி ஏமாந்த கதையை ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார் வெங்கட் பிரபு.

கலகலப்பான டீம்

கலகலப்பான டீம்

தமிழ்த் திரை உலகிலேயே கலகலப்பான இயக்குநர், கலகலப்பான படப்பிடிப்பு தளம், கலகலப்பான டீம் என்று யாரிடம் கேட்டாலும் வெங்கட் பிரபு அவர்களைத்தான் கூறுவார்கள். காரணம் எப்போதுமே ஒரு இடத்தை நகைச்சுவையாக வைத்துக் கொண்டு அதே வேளையில் தான் செய்யும் வேலையிலும் கவனமாக இருந்து சரியாக படப்பிடிப்பு நடத்துவாராம் வெங்கட் பிரபு. அதனாலேயே நடிகர்கள் அஜித், சூர்யா, கார்த்தி போன்றவர்கள் அவரது படத்தில் நடிக்க விரும்பினார்கள்.

நம்பி எடுத்த படம்

நம்பி எடுத்த படம்

முதல் படமான சென்னை 28 திரைப்படத்தை பார்த்து பார்த்து எடுத்து ஹிட் கொடுத்தார். பின்னர் சரோஜா திரைப்படத்தையும் அதே கவனத்தோடு எடுத்து ஹிட் கொடுத்தார். இரண்டு படங்களுமே மிகப் பெரிய வெற்றியடைந்ததால், தான் எது எடுத்தாலும் ரசிக்கிறார்கள் என்று எண்ணம் வந்து கோவா திரைப்படத்தை எடுத்தாராம். படத்தை எடுத்து முடித்து பார்த்தவுடன், இனிமேல் நாம்தான் என்ற எண்ணம் தோன்றியதாகவும், கரகாட்டக்காரன் செய்த வசூல் சாதனையை கோவா திரைப்படம் முறியடிக்கப் போகிறது என்றும் நம்பினாராம்.

கற்றுக் கொண்ட பாடம்

கற்றுக் கொண்ட பாடம்

ஆனால் மக்களிடம் இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு முற்றிலும் மாறாக இருந்ததாகவும், அப்போதுதான் சினிமா நமது கட்டுப்பாட்டில் இல்லை. சினிமாவின் கட்டுப்பாட்டில் தான் நாம் இருக்கிறோம் என்று உணர்ந்தாராம் வெங்கட் பிரபு. அந்தப் படத்தினுடைய பெயர் கோவா, கதைக் களமும் கோவாவில் நடக்கும். ஆனால் படப்பிடிப்பு என்னவோ பெரும்பாலும் மலேசியாவில் தான் எடுத்துள்ளனர்.சில பகுதிகளைத்தான் கோவாவில் எடுத்தார்களாம்.

வாங்கிய திட்டு

வாங்கிய திட்டு

கோவா திரைப்படத்தை பார்த்த பல இளைஞர்கள் கோவாவிற்கு சென்றால் நாமும் வெள்ளைக்கார பெண்ணை மனம் முடித்து விடலாம் என்ற எண்ணத்தில் திரிந்தார்கள். அப்படி சில நபர்கள் கோவாவிற்கும் சென்றார்களாம். ஆனால் கோவா முழுக்க வயதான வெளிநாட்டவர்கள்தான் பெருமளவு இருந்ததாகவும், அங்கு சென்று வந்த சிலர் தன்னை அசிங்கமாக திட்டியதாகவும் வெங்கட் பிரபு கலகலப்பாக ஒரு நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X