விஸ்வரூபம் 100... கமலுக்கு ஒரு பெயின்டிங் பரிசு!
விஸ்வரூபம் படம் 100 நாட்களைத் தொட்டதைக் குறிக்கும் வகையில் அவருக்கு ஒரு பெயின்டிங்கை பரிசளித்துள்ளார் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர்.
கமல் ஹாஸன் நடித்து தயாரித்து இயக்கிய படம் விஸ்வரூபம்.

வரலாறு காணாத சர்ச்சை
சர்ச்சைகளுக்கெல்லாம் சிகரம் என்பார்களே... அப்படியொரு சர்ச்சைப் படமாக வந்தது இந்த விஸ்வரூபம். இந்து, முஸ்லிம் என மத அடிப்படையில் பிரச்சினை ஒருபக்கம், தியேட்டர் உரிமையாளர்கள் - டிடிஎச்காரர்கள் பிரச்சினை ஒரு பக்கம் என ஏக பிரச்சினைகள்.

நாட்டைவிட்டே போறேன்..
இந்தப் பிரச்சினைகளையெல்லாம் பார்த்து மனம் வெறுத்து நான் மதச் சார்பில்லா நாடு தேடிப் போகப் போகிறேன் என்று கமல் திரும்பத் திரும்ப அறிக்கைவிட்டார். முதல்வர் ஜெயலலிதாவே தனி பிரஸ் மீட் வைத்து கமலின் விஸ்வரூபம் விவகாரத்துக்கு விளக்கம் சொல்ல வேண்டிய நிலை.

100வது நாள்...
ஒரு வழியாக பிரச்சினைகள் தீர்ந்து வெளியான விஸ்வரூபம் நல்ல வசூலைப் பெற்றதாக கூறப்பட்டது. கமல் கூட ரூ 200 கோடியை வசூலித்துவிட்டதாக பெருமையுடன் பிரஸ் ரிலீஸ் அனுப்பினார். நேற்று முன்தினம் இந்தப் படம் சத்யம் மற்றும் பிவிஆரில் நூறாவது நாளைத் தொட்டது.

ஒவியம் பரிசு
இந்த சிறப்பு நிகழ்வையொட்டி, கமலுக்கு அவரின் விஸ்வரூப கெட்டப்பை ஓவியமாக வரைந்து பரிசாக அளித்தார் பிரபல ஓவியர் ஏபி ஸ்ரீதர்.

கமல் மகிழ்ச்சி
இந்த ஓவியங்களை எடுத்துக் கொண்டு நேராக கமல் வீட்டுக்கே தன் மகள் வருணா மற்றும் வின்சென்ட் அடைக்கலராஜுடன் போய் கொடுத்துள்ளார் ஸ்ரீதர். இந்தப் படத்தைப் பார்த்து மகிழ்ந்து பாராட்டினாராம் கமல்.


Click it and Unblock the Notifications











