twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிச்சயமில்லாத தரத்தில் பொங்கல் படங்கள்!

    By Staff
    |

    Shriya and Danush
    இந்தப் பொங்கலுக்கு 4 படங்கள் வெளியாவது பொங்கல் பண்டிகையின் முதல் தினமான இன்றுதான் உறுதி செய்யப்பட்டது.

    கடைசி வரை வருமா வராதா என்ற கேள்விக்குறியோடு காக்க வைத்த ஆயிரத்தில் ஒருவன் ஒரு வழியாக நாளை வெளியாகிறது.

    பொங்கல் ரேஸில் எந்தப் படம் முதலில் வரும் என்ற கேள்விக்கு மட்டும் இந்த முறை இடமில்லை.

    காரணம் இந்தப் படங்களின் தரம்... 'ஆஹா இது பிரமாதமான படம்' என்று சொல்ல ஆரம்பித்தால், அது ஏதாவது ஒரு தெலுங்குப் படத்தின் ரீமேக் அல்லது ஆங்கிலப் படத்தின் உல்டாவாக வந்து நிற்கும்.

    ஆயிரத்தில் ஒருவன், குட்டி, போர்க்களம் மற்றும் நாணயம் ஆகிய இந்த நான்கு படங்களுமே மேலே சொன்ன வரையறைக்குள் பொருந்திப் போவதால், ஜஸ்ட் ஒரு ப்ரிவியூ மட்டும் இங்கே...

    குட்டி:

    பொங்கலுக்கு வெளியாகும் படங்களில், பரவாயில்லை... ஏமாற்றாது என்று கோடம்பாக்கம் புள்ளிகளே நம்பும் படம் குட்டி. காரணம் இந்தப் படத்தின் ஒரிஜினல் படமான ஆர்யா அப்படி பட்டாசு கிளப்பிய படம்.

    தனுஷ் - ஸ்ரேயா ஜோடி ஏற்கெனவே திருவிளையாடலில் விளையாடி ஜெயித்த அனுபவமுள்ளது என்ற ராசி நம்பிக்கையும் இதற்கு இன்னொரு காரணம்.

    மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்தப் படம்தான் பொங்கலுக்கு தயார் என எந்த தடுமாற்றமும் இல்லாமல் தயாரான படம் என்பதால் எதிர்பார்ப்பும் கூடுதலாகவே உள்ளது.

    ஆயிரத்தில் ஒருவன்:

    இந்தப் படத்தைப் பார்த்த சிலர் 'ஓஹோ' என்றும், சிலர் 'அய்யே' என்றும் கலவையாக சொல்ல ஆரம்பித்துள்ளனர். பல பிரச்சினைகளைத் தாண்டி, 'வந்தால் போதும்' என்ற மனநிலையில் வெளியாகும் இந்தப் படம் கார்த்திக்கு நிச்சயம் ஒரு அமில சோதனைதான்.

    ஆயிரத்தில் ஒருவன் குறித்து திரையுலகினர்தான் பெரிய அளவு பில்டப் கொடுத்து வருகிறார்களே தவிர, ரசிகர்கள் 'வரட்டும் பார்க்கலாம்' என்றுதான் காத்திருக்கின்றனர்.

    நாணயம்

    எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மகன் தயாரித்துள்ள படம். ஒரு ஆங்கிலப் படத்தின் உல்டாதான் இது. பிரசன்னா வித்தியாசமாக நடித்துள்ளதாக படம் பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர்.

    எந்த எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில் வெளியாகிறது. இதில் கொடுமை என்னவென்றால், இப்படியொரு படம் வெளியாவதையே பத்திரிகைகள் சொல்லித்தான் தெரிய வேண்டியுள்ளது. அந்த அளவு மோசமான பப்ளிசிட்டி.

    போர்க்களம்

    கடைசி நேரத்தில் பொங்கல் களமிறங்கிய படம் போர்க்களம். பண்டி சரோஜ்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இதன் ஹீரோ கிஷோர். வெண்ணிலா கபடி குழுவில் மனதைக் கவர்ந்த அதே கபடி ட்ரெயினர்தான்.

    இந்த ரேஸில் கறுப்புக் குதிரை என்பார்களை அதுபோல, திடீரென இந்தப் படம் முன்னாள் வரவும் வாய்ப்புள்ளதாக பரபரப்பைக் கிளப்பி விட்டுள்ளனர், படக்குழுவினர்.

    சந்தைக்கு வந்தாச்சுல்ல... சொத்தையா சூப்பரான்னு நாளை தெரிந்துவிடப் போகிறது..!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X