»   »  தலைவர் பர்த்டே: ரஜினி ரசிகர்களுக்கு நாளை ஸ்பெஷல் ட்ரீட் இருக்கு

தலைவர் பர்த்டே: ரஜினி ரசிகர்களுக்கு நாளை ஸ்பெஷல் ட்ரீட் இருக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ன்னை: ரஜினிகாந்த பிறந்தநாள் பரிசாக கபாலி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் நாளை வெளியிடப்படுகிறது.

நாளை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் ஆகும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் பத்திரிகையாளர் சோ ஆகியோர் காலமான இந்த நேரத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என ரஜினி தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

A special treat for Rajini fans tomorrow

தனது பிறந்தநாளையொட்டி போஸ்டர்கள் மற்றும் பேனர்களும் வைக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார் ரஜினி. இந்நிலையில் ரஜினியின் ரசிகர்களுக்கு நாளை ஒரு விருந்து காத்துள்ளது.

ரஜினி நடிப்பில் வெளியான கபாலி படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் நாளை வெளியிடப்படுகின்றது. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள கபாலி பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் யூடியூப் கணக்கை பார்க்குமாறு எடிட்டர் பிரவீன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

கபாலி காட்சிகளை பார்த்து ரசிக்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

English summary
Rajini fans have a treat on their Thalaivar's birthday. Deleted scenes from Kabali will be released tomorrow.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil