ரஜினி ரசிகர் கஜினிக்கு வயசு 48
மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தனது 48வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
பாலிவுட்டில் உள்ள 3 முக்கியமான கான்களில் ஒருவர் ஆமீர் கான். அவர் இன்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். எதை செய்தாலும் அது சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவரை மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் என்று அழைக்கின்றனர். அவர் நடித்த 3 இடியடஸ் படம் வசூலில் புதிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமீர் நடிப்பு தவிர இயக்கம், தயாரிப்பு, மார்க்கெட்டிங் உள்ளிட்ட துறைகளிலும் கலக்கியுள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆமீர் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பார்ப்போம்...

குழந்தை நட்சித்திரமாக அறிமுகம்
ஆமீர் தனது உறவினர் நாசிர் ஹுசைனின் படமான யாதூன் கி பாராத்தில்(1973) குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அபுல் கலாம் ஆசாத் குடும்பம்
ஆமீர் கான் சுதந்திர போராட்ட வீரர் அபுல் கலாம் ஆசாத் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

டென்னிஸ் வீரர் ஆமீர்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படத்திற்கு பிறகு ஆமீர் மகாராஷ்டிரா மாநில டென்னிஸ் சாம்பியன் ஆனார்.

முன்னாள் ஜனாதிபதியின் சந்ததி
ஆமீர் கான் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஜாகீர் உசேனின் சந்ததி. மேலும் அவர் ராஜ்யசபாவின் முன்னாள் சபாநாயகர் டாக்டர் நஜ்மா ஹெப்துல்லாவின் உறவினர் ஆவார்.

ஆஸ்கருக்கு போன லகான்
ஆமீர் கான் நடித்த லகான் படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ரஜினி ரசிகர்
ஆமீர் கான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர் ஆவார்.

முதல் மனைவி ரீனா
ஆமீர் நடித்த கயாமத் சே கயாமத் தக் படத்தில் அவரது முதல் மனைவி ரீனா தத்தா கவுரவ வேடத்தில் நடித்திருந்தார்.

பிலிம்பேர் விருது
1996ம் ஆண்டு வெளியான ராஜா இந்துஸ்தானி படத்திற்காக ஆமீர் தனது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

மெழுகுச் சிலை வேண்டாமே
கடந்த 2007ம் ஆண்டில் ஆமீரின் மெழுகுச் சிலையை செய்ய மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் அவரை அணுகியது. ஆனால் தனக்கு மெழுகுச் சிலை வேண்டாம் என்று கூறிவிட்டார்.

இரண்டாவது மனைவி கிரண் ராவ்
ஆமீர் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை லகான் படப்பிடிப்பின்போது சந்தித்தார்.


Click it and Unblock the Notifications











