Year Ender 2024: ஆவேசம் டூ மஞ்சுமெல் பாய்ஸ்.. இந்த ஆண்டு வசூலை அள்ளிய மாலிவுட் படங்கள்!
சென்னை: 2024 ஆம் ஆண்டு மலையாள சினிமாவிற்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது என்று சொல்லலாம். இந்த ஆண்டு மலையாளத்தில் பல சுவாரசியமானத் திரைப்படங்கள் வெளியானது. அந்த திரைப்படங்கள் மலையாளத்தில் மட்டுமில்லாமல், தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் வெளியாகி சக்கைப்போடு போட்டன. அவை எந்தெந்த படங்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.
கிஷ்கிந்தா காண்டம்: 'கிஷ்கிந்தா காண்டம்' படத்தில் ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி, விஜயராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். குரங்குகள் வசிக்கும் கிராமத்தில் நடக்கும் விசித்திரமான நிகழ்வுகளை வெளிக்கொண்டு வரும் பணியில் ஈடுபடும் ஒரு ஜோடி மற்றும் வன அதிகாரிகளைச் சுற்றியே இந்தத் திரைப்படத்தின் கதை அமைந்து இருந்தது. இந்த படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பார்க்கலாம்.

ஆவேசம்: ஃபஹத் ஃபாசிலின் அட்டகாசமான நடிப்பில் வெளியானத் திரைப்படம் 'ஆவேஷம்'. மூன்று கல்லூரி மாணவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில், கல்லூரியில் கேலி செய்தவர்களை அடக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் உள்ளூர் ரௌடியின் உதவியை நாடுகின்றனர். அதன்பின் அவர்கள் என்ன மாதிரியான பிரச்சனை சந்திக்கின்றனர் என்பது தான் இப்படத்தின் கதை. இப்படத்தில் ஃபஹத் ஃபாசில், ஹிப்ஸ்டர், மிதுன் ஜெய் சங்கர், ரோஷன் ஷானவாஸ், சஜின் கோபு, மிதுட்டி, மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் மற்றும் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.
தலைவன்: ஜிஸ் ஜாய் இயக்கத்தில் பிஜு மேனன், ஆசிப் அலி, மியா ஜார்ஜ், அனுஸ்ரீ ஆகியோர் நடித்த திரைப்படம் தளவன். உள்ளூர் காவல் நிலையத்தில் நடக்கும் ஒரு விசாரணையை மையமாக வைத்து இப்படத்தின் கதை நகர்கிறது. அதிக வசூலை அள்ளிய இந்த படத்தை சோனி லிவ்வில் பார்க்கலாம்
பிரேமாலு: இந்த ஆண்டு வெளியான அட்டகாசமான திரைப்படம் என்றால், அது 'பிரேமலு’ திரைப்படத்தை சொல்லலாம். ரீனு ஒரு கல்யாணத்தில் சந்திக்கும் சச்சின் அவள் மீது காதல் கொல்கிறான். காதலில் ஏற்படும் உரசல், பிரிவு, அழுகை என இந்த படம் ஒட்டுமொத்த இளசுகளையும் கவர்ந்துவிட்டது. இதில்,நாஸ்லென் கே. கஃபூர், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். மேலும் சங்கீத் பிரதாப், அகில பார்கவன், ஷியாம் மோகன், மீனாட்சி ரவீந்திரன், மேத்யூ தாமஸ் மற்றும் அல்தாஃப் சலீம் ஆகியோர் உள்ளனர். இப்படத்தை ஆஹா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
மஞ்சுமெல் பாய்ஸ்: கமல் நடித்த குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடலை மீண்டும் பட்டி தொட்டி எங்கும் முனுமுனுக்கவைத்த திரைப்படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ். குணா குகைக்குள் விழுந்த நண்பனை காப்பாற்ற போராடும் நல்ல நட்பை இந்த படத்தின் கதை சொல்லியது. இப்படத்தை சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ், கணபதி எஸ்.பொதுவால், லால் ஜூனியர், தீபக் பரம்போல், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன், காலித் ரஹ்மான், ஷெபின் பென்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
Aadujeevitham: பிருத்விராஜ் சுகுமாரின் அட்டகாசமான நடிப்பில் வெளியானத் திரைப்படம் தான் கோட் ஆப் லைப். பணம் சம்பாதிப்பதற்காக சவுதி அரேபியாவுக்குச் செல்லும் பிருத்விராஜ் அங்கு அடிமையாக சிக்கிக்கொண்டு எப்படி எல்லாம் வாழ்க்கை நடத்தினார் என்பதை கண்முன் காட்சி படுத்தி இருந்தார் பிருத்விராஜ். நல்ல கலெக்ஷனை அள்ளி இப்படத்தில், பிருத்விராஜ் சுகுமாரன், ஜிம்மி ஜீன் லூயிஸ், கே ஆர் கோகுல், தலிப் அல் பலுஷி, ரிக் அபி, அமலா பால் ஆகியோர் நடித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











