»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அனுபவம் நிறைந்த கவர்ச்சி நடிகை அனுராதாவின் மகளான அபிநயஸ்ரீக்குத் தமிழில் வாய்ப்புக்கள்மளமளவென குறைந்துள்ளன.

படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் வரை படு "அப்பிராணியாக" நடந்து கொள்ளும்அபிநயஸ்ரீக்கு வாய்ப்பு கிடைத்தால் தயாரிப்பாளரின் பாடு படு திண்டாட்டமாகி விடுகிறதாம்.

ஒரே ஒரு பாடல் கட்சிக்கு மட்டும் ஆடினாலும், படத்தின் முழுக் கதையையும் கேட்டு தொந்தரவுசெய்து அவர்களை உண்டு, இல்லை என்று ஆக்கி விடுகிறார் அபிநயஸ்ரீ.

மேலும் தன்னுடைய சம்பளத்தையும் "குண்டக்க மண்டக்க" ஏற்றிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்திதயாரிப்பாளர்களை அவர் மிகவும் நோகடித்து வருகிறார். இதற்கெல்லாம் மேலாகபடப்பிடிப்பிற்கும் அபிநயஸ்ரீ ஒழுங்காக வருவதில்லையாம்.

இதனால் தயாரிப்பாளர்கள் தங்கள் கோபத்தை அவரது தாயார் அனுராதாவிடம் காட்ட அவருக்கும்மகளுக்கும் இடையே தகராறு வேறு ஏற்பட்டுள்ளதாம்.

அடுக்கடுக்கான புகார்களால் தற்போது அவருக்குப் பட வாய்ப்புகளும் அடியோடு குறைந்துபோயுள்ளன. இதனால் தெலுங்குப் படங்களில் வாய்ப்புத் தேடி வருகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil