20 வயசில் கமலுடன் அப்படி ஒரு நெருக்கமான காட்சியில் நடித்த அபிராமி.. விருமாண்டி சுவாரஸ்யம்!
சென்னை: மலையாளத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை அபிராமி வானவில் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின் போன்ற பல படங்களில் நடித்த ஹிட் கொடுத்தார் அபிராமி.
சமீபத்தில் விருமாண்டி படத்தில் நடித்த அனுபவத்தையும், தன்னை பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

குடும்பப்பாங்கான கதாபாத்திரம்
குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமான நடிகை அபிராமி, வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்து, சமுத்திரம், கார்மேகம், சமஸ்தானம் என்று பல படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை அபிராமி.

விருமாண்டி அன்னலட்சுமி
2004 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படம் இவருக்கு வேற லெவல் பெயரை பெற்றுத் தந்தது. விருமாண்டி படத்தில் கமல் ஹாசன், பசுபதி, நெப்போலியன் என்று நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த அபிராமி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

நெருக்கமான காட்சிகள்
கமல் ஹாசனுடன் படு நெருக்கமான காட்சிகளும் அந்த படத்தில் இருக்கும். விருமாண்டி படத்தில் நடித்த அனுபவத்தை பற்றியும் தன்னை பற்றியும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார் அபிராமி. விருமாண்டி படத்தை பற்றி நடிகை அபிராமி கூறுகையில், "விருமாண்டி படத்தில் நான் நடிக்கும் பொழுது எனக்கு 20 வயது தான் தொடங்கியது. விருமாண்டி படத்தில் நான் தூக்கு போட்டு சாகும் சீன் நடித்த பிறகுதான் எனக்கு பிறந்தநாளே வந்தது.

ரசிகையாக ரசித்தேன்
எப்பொழுதுமே படத்தில் நடிப்பதை விட டப்பிங் செய்யும் போது தான் அந்த படத்துடைய முழு ஃபீல் கிடைக்கும்.. ஆனால் அந்த படத்தின் டப்பிங் கூட நான் இந்த அளவு வெற்றியை எதிர்பார்க்கவில்லை. படம் ரிலீஸ் ஆன பிறகு மக்களோடு மக்களாக நான் பார்க்கும் பொழுது தான் எனக்கு பூரிப்பாக இருந்தது. இந்த மாதிரி ஒரு படமா என்று என்னை நானே கேட்டு கொண்டேன். அந்தப் படத்தின் கதையை அப்பொழுதுதான் நான் முழுமையாக உணர்ந்தேன். ஒரு ரசிகையாக விருமாண்டி படத்தை நான் மிகவும் ரசித்தேன் என்று கூறியுள்ளார் நடிகை அபிராமி. இன்றும் விருமாண்டி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











