»   »  சிரித்து மினுக்கி தகதிமிதா!

சிரித்து மினுக்கி தகதிமிதா!

Subscribe to Oneindia Tamil

தமிழ், தெலுங்கு என மாறி மாறி ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருக்கும்முன்னாள் உலுக்கல் நாயகி அனுராதாவின் சீமந்தப்புத்திரி அபிநயஸ்ரீ இப்போதுதெலுங்கில் ஆட்டத்தோடு, நடிப்பையும் வாரி வழங்க ஆரம்பித்துள்ளாராம்.

ஹீரோயின் கனவோடு கோலிவுட்டில் தலை பிளஸ் உடலைக் காட்டியவர் அபி.ஆனால் அம்மாவின் ஃபேக்ஸ் காப்பி போல அபியும் இருந்ததால், அம்மாவைப்போலவே கிளாமராக நடியுங்களேன் என்று எல்லோரும் கிளாமர் ரோல்களையேஆஃபர் செய்ய ஆரம்பித்தனர்.

இதனால் சலிப்புக்குள்ளான அபி பரவாயில்லை என்று அதையும் ஏற்றுக் கொண்டுகிளாமராகவும் நடிக்க ஆரம்பித்தார். அத்தோடு கூடவே வந்த குத்தாட்டவாய்ப்புகளையும் ஒரு கை பார்த்தார். ஒரு கட்டத்தில் அதுவும் நின்று போய் விடஅலுத்துப் போனார் அபி.

தமிழைக் கொஞ்சம் கிடப்பில் வைப்போம் என்று தெலுங்குப் பக்கம் தேட்டையைப்போட்டார் அபி. அவரது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்தது. கிளாமராக நடிக்கதெலுங்கிலும் நிறைய வாய்ப்புகள் வந்ததால் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டுபட்டையைக் கிளப்பினார்.

இப்போது கிளாமர் ஆட்டம், பாட்டத்தோடு, நடிக்கவும் செய்கிறாராம். அதுவும்காமெடி ரோல்களில். முன்னணி காமெடியன்கள் சிலரோடு டை அப் போட்டுக்கொண்டுள்ள அபி, அவர்களோடு சேர்ந்து மணவாடுகளின் வயிற்றில் புண்ணையும்,இதயத்தில் ஜில்லையும் கோர்த்து விட்டு கோக்குமாக்கு பண்ணி வருகிறாராம்.

அபியின் ஆட்டத்தைப் போலவே அவரது காமெடியும் கலக்கலாக இருக்கிறதாம்.காமெடியிலும் கூட கிளாமர் தெறிக்கிறதாம். அபியின் காமெடி நடிப்புக்கு வரவேற்புகிடைத்திருப்பதால் அவரது கிளாமர் காமெடிக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏகப்பட்ட படங்களுடன் ஜமாய்க்க ஆரம்பித்திருக்கிறது அபியின்மார்க்கெட். டப்பு மழையும் ஜோவென பெய்ய ஆரம்பித்துள்ளதாம். இதனால்அபியின் மனசும், அவரைப் பெத்த வயிறும் நிறைந்து போயிருக்கிறதாம்.

எல்லோரும் கலகலன்னு சிரிக்க வைப்பாங்க, அபியோ, கிளுகிளுன்னு சிரிக்கவைக்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil