»   »  அபிநயஸ்ரீ: 50-50 லாஜிக்

அபிநயஸ்ரீ: 50-50 லாஜிக்

Subscribe to Oneindia Tamil

அபிநயஸ்ரீயை அணுகும் தயாரிப்பாளர்களை அவர் அணுகும் விதமே படு சுவாரஸ்யமாக இருக்கிறது.

கிளாமர் பாம் அனுராதாவின் ஒத்தப் புத்திரி அபிநயஸ்ரீ ஹீரோயினாக வேண்டும் என்றுதான் பேராசையாகஇருந்தார். ஆனால் வந்ததோ சின்ன சின்ன கேரக்டர்கள்தான்.

ஃபிரண்ட்ஸ் படத்தில் சின்ன வேடத்தில் வந்து போனார். அதன் பிறகு துணை நாயகி, 3வது நாயகி, 4வது நாயகிரேஞ்சுக்குத்தான் ரோல்கள் கிடைத்தன. இப்படியே இருந்தால் வர்ற துட்டும் வராமல் போய் விடும் என்று அம்மாகொடுத்த அட்வைஸால் குத்தாட்டத்தில் குதித்தார்.

அதுக்கு இது பரவாயில்லை என்று கூறும்படியாக குத்தாட்ட வாய்ப்புகள் சுமாராக வந்து கொண்டிருந்தன.ஆனால் அதற்கும் ஆபத்தாக ரகஸ்யா வந்து சேர்ந்தார். அவர் வந்தவுடன் அபிக்கு வந்த வாய்ப்பு பூராவையும்அள்ளிக் கொண்டு போய் விட்டார்.

இதனால் சோர்ந்து போன அபி தெலுங்குப் படங்களில் குத்தாட்டம் போடப் போய் விட்டார். இப்போதும்அங்கும் மார்க்கெட் டல்லாக இருக்கிறதாம்.

இருந்தாலும் அபியை விரும்பும் சில தயாரிப்பாளர்கள் அவரிடம் வரத்தான் செய்கின்றனராம். குத்தாட்டம் போடவாங்க என்று கூப்பிட்டு வரும் தயாரிப்பாளர்களிடம் படு அன்பாக பேசி டீல் செய்கிறாராம் அபி.

குத்தாட்டம் போட ரெடி, எப்படி வேண்டுமானாலும் என்னை வைத்து எடுத்துக்கோங்க. அப்படியே கூட நாலுசீன்ல வர்ற மாதிரி மட்டும் ஏற்பாடு செய்திடுங்க. சம்பளத்தில் பாதியைக் குறைத்துக் கொள்கிறேன் என்றுதேனொழுக பேசி நடிப்புக்கும் வாய்ப்பு கேட்கிறாராம் அபி.

இதற்கு சில தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொண்டு சொன்னபடி சீனும் கொடுக்கிறார்களாம். அந்த சீன்களும் கூடகிளாமராகத்தான் இருக்கிறதாம். ஆனால் சில தயாரிப்பாளர்களோ, குத்தினால் மட்டும் போதும் என்றுஆட்டத்திலேயே குறியாக நிற்கிறார்களாம்.

இந்த கண்டிஷனுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் வருகிற வாய்ப்புகளை வாங்கிக் கொண்டு சமத்தாக ஆடிக்கொடுத்து வருகிறாராம் அபி.

நல்ல பொண்ணுதான்!

Read more about: abinayasris business logic
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil