சென்னையில் ஹஸாரே: சந்தித்த அர்ஜூன்... வராத விஜய்!!
சென்னைக்கு ஒரு நாள் பயணமாக நேற்று வந்த அன்னா ஹஸாரே, முதல் வேலையாக அ பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெல்கம் பேக் காந்தி (முதல்வர் மகாத்மா) படம் பார்த்தார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள போர்பிரேம்ஸ் அரங்கில் இந்தப் படம் திரையிடப்பட்டது.
படம் பார்க்க வந்த அன்னா ஹஸாரேவை ஆக்ஷன் கிங் எனப்படும் நடிகர் அர்ஜூன் சந்தித்துப் பேசினார். அப்போது அவரைக் குறித்து ஹஸாரே விசாரித்து அறிந்து கொண்டார். ஹஸாரேயின் ஊழல் எதிர்ப்புப் போருக்கு தனது ஆதரவு உண்டு என்று அர்ஜூன் கூறினார்.
விஜய் வரவில்லை...
டெல்லியில் ஹஸாரே உண்ணாவிரதம் இருந்த போது, சென்னையிலிருந்து ஓடிச் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்து, ராம்லீலா மைதானத்தில் பேட்டியெல்லாம் கொடுத்த நடிகர் விஜய், இப்போது ஹஸாரே சென்னைக்கே வந்த போதிலும் நேரில் வந்து பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது தந்தையும் இயக்குநருமான எஸ் ஏ சந்திரசேகர் மட்டுமே ஹஸாரேயைச் சந்தித்துப் பேசினார்.


Click it and Unblock the Notifications












