என்னய்யா வயசு புள்ளைய தடவுற மாதிரி தடவுற... பாக்கியராஜை கலாய்த்த வாலி
சென்னை: எம்.ஜி.ஆர் முதல் சிவகார்த்திகேயன் வரை எம்.எஸ்.விஸ்வநாதன் முதல் ஆனிருத் வரை நான்கு தலைமுறைகளுக்கு பாடல்கள் எழுதியவர் வாலிபக் கவிஞர் வாலி அவர்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் வாலி அவர்களை வைத்து பாடல் எழுத வைக்காமல் தங்களது சினிமா வாழ்க்கையை கடந்ததில்லை என்றே சொல்லலாம்.
இந்நிலையில் தனக்கும் கவிஞர் வாலி அவர்களுக்கும் இடையே நடந்த சுவாரசியமான நிகழ்வு ஒன்றை கூறியுள்ளார்.

வெறுப்படையும் வாலி
வழக்கமாக பாக்யராஜ் படங்களுக்கு பாடல் எழுதுவது என்றால் வெறுப்பாகி விடுவாராம் வாலி. காரணம் எப்போதும் சிகரெட்டை புகைத்துக் கொண்டேதான் பாடல் எழுதும் பணியில் பாக்யராஜ் இருப்பாராம். பாக்யராஜை விட அவர் ஊதிய சிகரெட்டின் புகையை தான்தான் அதிகமாக இழுத்துள்ளதாக வாலி முன்னதாக கூறியிருக்கிறார்.

பொறுமையை சோதிக்கும் பாக்யராஜ்
அதேபோல ஒரு பல்லவி எழுதிக் கொடுத்தால் அதனை பார்த்துக் கொண்டே இருப்பாராம் பாக்யராஜ். எவ்வளவு நேரம் என்றால் பாக்யராஜின் வீட்டில் கொடுக்கும் உணவை வாலி சாப்பிட்டு முடித்துவிட்டு அமர்ந்தபடியே தூங்கி, சிறிது நேரம் கழித்து கண் விழித்து பார்த்தால் அப்போதும் பாக்யராஜ் அதையே பார்த்துக் கொண்டிருப்பாராம். ஒரு பல்லவியே அவ்வளவு நேரம் பார்த்து தனது பொறுமையை சோதிப்பார் என்றும் ஆனால் இறுதியில் அவர் கொடுக்கும் சம்பளத்தில்தான் மீண்டும் அவருடன் பணியாற்றினேன் என்றும் வாலி நகைச்சுவையாக கூறியிருக்கிறார்.

வெற்றிலைப் பாக்கு
வாலி அவர்களுக்கு வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கம் அதிகமாக இருந்ததாம். பாடல் எழுத அமர்ந்தால் பல்லவி கிடைக்காத பட்சத்தில் வெளியே சென்று வெற்றிலைப் பாக்கு போட்டுவிட்டு வருவாராம். உடனே பல்லவி வந்து விடும் என்று பாக்யராஜ், ஷங்கர், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பல இயக்குநர்கள் இதற்கு முன் கூறியிருக்கின்றனர்.

வயசு புள்ள
ஒருமுறை பாக்யராஜ் படத்தின் ஒரு பாடலுக்காக வாலியுடன் அவர் அமர்ந்திருந்த போது வாலி வெற்றிலைப் பாக்கை எடுத்து போட்டாராம். தனக்கும் அந்தப் பழக்கம் இருப்பதால் தன்னால் கண்ட்ரோல் செய்ய இயலாமல் அவரிடம் வெற்றிலைப் பாக்கு வாங்கி அதன் காம்பு மற்றும் நுனிப் பகுதியை கிள்ளி எறிந்துவிட்டு மடியில் லாவகமாக தேய்த்து. சுண்ணாம்பை தேவையான அளவு எடுத்து அதனை வெற்றிலைப் பாக்கில் பட்டும் படாமல் தடவி, அளவான பாக்கை அதில் வைத்து சுருட்டி வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தாராம். அவர் அவ்வளவு ரசித்து ருசித்து வெற்றிலைப் பாக்கு போட்டதை கவனித்த வாலி,"என்னய்யா வயசு புள்ளயே தடவுற மாதிரி தடவி போடுற" என்று நக்கல் அடித்ததாக பாக்யராஜ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











