twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    10-வது படிக்கும்போதே மிமிக்ரிக்காக முதல் பரிசு வாங்கிய நடிகர் தாமு... தண்ணி தெளித்துவிட்ட அப்பா!

    |

    சென்னை: நடிகர் 'தாமு' இயக்குனர் "கே பாலச்சந்தர்" இயக்கத்தில் வானமே எல்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார்.

    இவர் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர், இதுவரை ஏறத்தாழ 100 படங்கள் நடித்துள்ளார்.

    தாமு 10- வது படிக்கும்போது மிமிக்கிரி போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றுள்ளார். அதன் பின்பு அவரின் அப்பா, இனி உன் விருப்பம் என்று தண்ணி தெளித்துவிட்டாதாக வேடிக்கையாக சமீபத்தில் நடந்த டூரிங் டாக்கஸ் நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார்.

    'லவ் யூ விஜிமா”: வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அப்டேட் கொடுத்த விஜய்யின் தோஸ்த்து படா தோஸ்த்'லவ் யூ விஜிமா”: வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அப்டேட் கொடுத்த விஜய்யின் தோஸ்த்து படா தோஸ்த்

    மாயக்குரல் (மிமிக்கிரி) நடிகர்

    மாயக்குரல் (மிமிக்கிரி) நடிகர்

    நடிகர் தாமு சிறுவயதில் இருந்து மிமிக்ரி செய்வது மிகவும் வல்லவராக இருந்திருக்கிறார்.

    உலக நாடுகளில் நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாக்களிலும் பங்கேற்று மாயக்குரலில்(மிமிக்கிரி) பேசியிருக்கிறார்.

    அப்பாவிற்கு பெருமை சேர்த்த தாமு

    அப்பாவிற்கு பெருமை சேர்த்த தாமு

    நடிகர் 'தாமு' நார்மல் மற்றும் புல்லட் ரயில் சத்தத்தையும் தனது வாயாலே அந்த சத்தத்தை வெளிப்படுத்தக் கூடியவர்.இவர் பத்தாவது படிக்கும்போது பெரம்பூர் ரயில்வே நியூ ஹால் -யில் நடைபெற்ற மிமிக்ரி போட்டியில் ஏறத்தாழ 40 பேர் கலந்து கொண்டார்கள். அதில் தாமு -க்கு முதல் பரிசு 1000 ரூபாயும், சிறிய ரயில் வடிவத்தில் பொம்மையும் அறிவிக்கப்பட்டது. தாமுவும் அவரின் அப்பாவும் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் மேடைக்கு சென்று அந்த பரிசு பெற்றிருக்கிறார். அந்த சந்தோஷத்தில் இனி உன் வாழ்க்கை உன் கையில் என்று அவர் போக்கில் விட்டு விட்டார்.

    நடிகரான தாமு

    நடிகரான தாமு

    நடிகர் 'தாமு' இயக்குனர் "கே பாலச்சந்தர்" இயக்கத்தில் வானமே எல்லை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்.

    இதுவரை இவர் ஏறத்தாழ 100 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த அமர்க்களம், ஜெமினி, பாஷா, காதலுக்கு மரியாதை, ஜெய்,சாக்லேட் , ஆசையில் ஒரு கடிதம் மற்றும் "கில்லி" திரைப்படத்தில் 'ஒட்டேரி நரி' என்று காப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமாக இருந்தவர்.

    ஏ பி ஜே அப்துல்கலாம் - க்கு உதவியாளராக

    ஏ பி ஜே அப்துல்கலாம் - க்கு உதவியாளராக

    இவர் ஏழு ஆண்டுகளாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றினார்.திரைப்படத் துறையைத் தாண்டி கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றிய சேவைகளுக்காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் 'ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021' தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது என்பது கூடுதல் தகவல்.

    English summary
    Actor Dhamu Rejected by his father when he got first prize for Mimicry in 10th Standard
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X